கோலாலம்பூர், செடாபக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 22-வது மாடியில் இருந்து 6-வது மாடிக்கு கீழே விழுந்து 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜாலான் லங்காவி பகுதியில் உள்ள ரெசிடென்சி தெராத்தாய் குடியிருப்பில் இன்று காலை உடலைக் கண்டெடுத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், காலை 8.50 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக வங்சா மாஜு காவல்துறை தலைவர் அன்னாஸ் சுலைமான் தெரிவித்தார்.
கண்காணிப்பு புகைப்படக்கருவிக் காட்சிகளின்படி, யுனிவர்சிட்டி ஜியோமேட்டிகா மலேசியா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவரான அந்தப் பாதிக்கப்பட்ட நபர், காலை 7.07 மணிக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்குத் திரும்பியதை அது காட்டுவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என வகைப்படுத்தப்பட்டு, விசாரணையை முழுமையாக முடிப்பதற்காக மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்று அன்னாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மன அழுத்தம், மன உளைச்சல் அல்லது உணர்வு ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் அல்லது 03-7627 2929 என்ற எண்ணில் பிஃப்ரெண்டர்ஸ் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம்.
-fmt
























