பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக மேரு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரனி ஒஸ்மான் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமிக்கப்படலாம்போல் தோன்றுகிறது.
ரனி, மாநில ஆணையர் என்ற முறையில் பாஸ் கட்சியில் உயர்ந்த பதவி வகிப்பவர். அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் நல்ல அனுபவமும் உள்ளவர். அந்த வகையில் தகுதியானவர் பட்டியலில் அவரது பெயர் முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது.
அதே வேளை சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் யூனுஸ் ஹய்ரி, பாங்கி சட்டமன்ற உறுப்பினர் ஷாபி அபு பக்கார் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
திடீர் திருப்பம் எதுவும் ஏற்பட்டாலொழிய, ரனியே நாளை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுவார்.
ரனி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டால், நாளை நடைபெறும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அவர் முதல் முறையாகக் கலந்துகொள்வார்.