ஹசன் அலியின் இடத்துக்கு சிஜங்காங் பிரதிநிதி நியமனம்

பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக, சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் யூனுஸ் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத ஒரு நியமனம் இது.

சிலாங்கூர் பாஸ் ஆணையர் டாக்டர் ரனி ஒஸ்மானே அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

புதிய ஆட்சிக்குழு உறுப்பினரான அஹ்மட், இன்று காலை காயாங்கான் அரண்மனையில் சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.