ஆயுதக் கொள்முதல் குறித்து ஸாகிட் துளைக்கப்படவிருக்கிறார்

நாளை தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடியை சந்திக்க விருக்கும் மூன்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைக்குள்ளான பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஆயுதக் கொள்முதல் குறித்து அவரை குடையவிருக்கின்றனர்.

டிஎபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, பிகேஆர் மாச்சாங் எம்பி சைபுடின் நசுடியன் மற்றும் பாஸ் கோலசிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அஹமட் ஆகிய மூவரே எதிரணியின் பிரதிநிதிகள் ஆவர்.

பவுஸ்டெட் நேவல் ஷிப்யார்ட் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ரிம9 பில்லியன் மதிப்புள்ள ஆறு கடற்கடை தற்காப்பு கப்பல்கள் கொள்முதல் ஒப்பந்தம் அச்சந்திப்பில் பேசப்படுபவைகளில் ஒன்றாக இருக்கும்.

“அக்கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான உச்ச விலை ரிம6 பில்லியன் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் இருமுறை தற்காப்பு அமைச்சர் தெரிவித்த பின்னர் அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது”, என்று புவா இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

“இது முதலில் அறிவிக்கப்பட்ட விலையிலிருந்து ரிம3 பில்லியன் அல்லது 50 விழுக்காடு உயர்வாகும்.”