அரசாங்க நிர்வாகத்தின் நேர்மையை உறுதி செய்யும் பொருட்டு அமைச்சர்களுடைய துணைவியர்/துணைவர்கள் தங்கள் சொத்து விவரங்களை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் அறிவிக்க வேண்டியிருக்கும். தி ஸ்டார் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டது.
அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளதாக எம்ஏசிசி ஆலோசனைக் குழுத் தலைவர் ஜைத்தோன் ஜாவியா பூத்தே இன்று கூறினார். அது விரைவில் அமலாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜைத்தோன் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.