நஜிப் எனக்கு எதிரான மருட்டல்களுக்கு “அங்கீகாரம்” அளித்தார் என அம்பிகா கூறுகிறார்

தேர்தல் சீர்திருத்தம் கோரி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நடத்தப்பட்ட பொதுப் பேரணிக்கு முன்னதாக தமக்கு எதிராக விடுக்கப்பட்ட மருட்டல்களுக்கு பிரதமர் “அங்கீகாரம்” அளித்தார் என பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமது “பயங்கரமான” கனவுகளை நினைவு கூர்ந்த அவர், “அரசாங்கத்தில் உள்ள நடிகர்கள், அரசாங்கத்தில் இல்லாத நடிகர்கள் போன்றவர்கள் ” காரணமாக தமது சொந்தப் பாதுகாப்பு பணயம் வைக்கப்பட்டிருந்ததாக சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணைய பொது விசாரணையில் கூறினார்.

சிலாட் தற்காப்புக் கலை அமைப்புக்களை உறுப்பினர்களாகக் கொண்ட Pertubuhan Seni Silat Lincah Malaysia-வை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆதரிப்பதாக மலேசியா இன்சைடர் என்னும் செய்தி இணையத் தளத்தில் வெளியான தகவலை அந்த முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவர் ஆதாரமாகக் காட்டினார்.

“அந்தப் பேரணி ரத்துச் செய்யப்படா விட்டால் பெர்சே 2.0 மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த அமைப்பு எச்சரித்திருந்தது. ”

“என்னை நம்புங்கள், நாட்டுக்குள் இருந்தும் நாட்டுக்கு வெளியில் இருந்தும் தாக்குதல் தொடுக்க தீய நோக்குடைய எதிரிகள் விரும்பினால் ‘anak-anak lincah’ அவர்களை எதிர்த்துப் போரிட எழுவர்,” என அந்தப் பேரணிக்கு இரண்டு நாள் முன்னதாக நஜிப் கூறியதாக சொல்லப்பட்டது.

ஜுலை 2ம் தேதி “யாருக்கு அம்பிகாவைத் தெரியாது. அவர் இஸ்லாத்தை மருட்டியவர் ஆவார். அவருக்குக் கீழே மாட் சாபு இருக்கிறார்,” எனக் கூறியதின் மூலம் நஜிப் தம்மை “இஸ்லாத்துக்கு மருட்டல்” என குறிப்பிட்டதாகவும் அம்பிகா சொன்னார்.