துணைப் பிரதமர்: என்எப்சி திட்டம் கணக்காய்வு செய்யப்படும்

அரசாங்கம் சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை கணக்காய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்றை நியமிக்கும்.

அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார்.

அந்த நிறுவனம் கடன் நீதிகளை பயன்படுத்தியது, நிர்வாகம்,  நடப்பு நிதி நிலை ஆகியவை அந்த  கணக்காய்வில் உட்பட்டிருக்கும் என அவர் சொன்னார்.

“அடுத்த ஒரு மாதத்துக்குள் கணக்காயர் நிறுவனம் நியமிக்கப்பட்டு விடும்,” என அவர் சொன்னதாக பெர்னாமா குறிப்பிட்டது.

அக்ரோ சயன்ஸ் சென் பெர்ஹாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கூட்டுத் தொழில் திட்டமாக  என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதாக முஹைடின் சொன்னார். அதற்கு அந்தத் திட்டத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தத் திட்டத்தை அமலாக்க அரசாங்கம் எளிய நிபந்தனைகளுடன் கூடிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை வழங்கியது. அதில் 181 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டு விட்டது.

2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அந்த என்எப்சி திட்டம் அதன் நோக்கத்தை அடையத் தவறி விட்டதாகக் குறிப்பிடப்பட்ட பின்னர் அது குறித்த சர்ச்சை வெடித்தது.

பெர்னாமா

TAGS: