எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை உயர் நீதிமன்றம் குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்ததை எதிர்த்து முறையீடு செய்து கொள்ள சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்ததை முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வரவேற்றுள்ளார்.
“முறையீட்டுக்கான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதின் மூலம் 2008ம் ஆண்டு என்னுடைய போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளவாறு எனது உரிமை செவிமடுக்கப்பட்டுள்ளது என்றும் மேல் நீதிமன்றம் ஒன்றில் அது விசாரிக்கப்படுகிறது என்றும் நானும் என் குடும்பமும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.”
“முறையீட்டு நீதிமன்றத்தின் நீதி பரிபாலன நடவடிக்கைக்கு அது உட்படுத்தப்பட வேண்டும் என குடி மகன் என்னும் முறையில் என்னுடைய உரிமை நிறைவேற்றப்படுவதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என mohdsaifulbukhari.blogspot.com என்னும் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யப் போவதாகவும் பொறுமையாக இருக்கப் போவதாகவும் சைபுல் கூறியுள்ளார்.
தீர்ப்புக்கு எதிரான முறையீடு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பெர்னாமா