20மில்லியன் மலேசிய சிகரெட்டுகள் கிரீசில் பறிமுதல்

கிரேக்க அதிகாரிகள், பிரோஸ் துறைமுகத்தில் மலேசியாவிலிருந்து கொள்கலன்களில் வந்திறங்கிய தடைசெய்யப்பட்ட 20மில்லியன் சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் வழங்கிய தகவலைக் கொண்டு வெள்ளிக்கிழமை அப்பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜேக் மேன், வால்டன் என்ற பெயரைக் கொண்ட அந்தச் சிகரெட்டுகளை ஐரோப்பாவில் விற்க அனுமதி இல்லை என்றவர்கள் கூறினர்.

ஐரோப்பாவுக்குள் தடை செய்யப்பட்ட  சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல கிரீஸ் நுழைவாயிலாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.ஒவ்வோர் ஆண்டும் பல மில்லியன் சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்குகின்றன.அவை பெரும்பாலும் மத்திய கிழக்கு வழியாகக் கொண்டுவரப்படுகின்றன.