சிட்னி ஆடை வடிவமைப்பாளர் கார்ல் காப், மலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தம் கடையில் பொருள்கள் வாங்கியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், ரோஸ்மா பொருள்வாங்க A$ 100,000 செலவிட்டார் எனக்கூறப்படுவதை அவர் மறுத்தார்.
மலேசியாகினி கேட்டுக்கொண்டதன்பேரில் தம் கருத்துகளை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கும் காப், ரோஸ்மா அங்கு வந்திருந்தபோது பல்வேறு பொருள்களை வாங்கியதாகக் கூறினார்.
ஆனால்,சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாளில் குறிபிட்டுள்ளதைப்போல் பொருள்வாங்க அவர் செலவிட்ட தொகையைத் தாம் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றார்.
“மேன்மைதங்கிய வாடிக்கையாளர் வருகை தொடர்பில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர் என்னுடைய பெட்டிங்டன் ஸ்டோரில் எவ்வளவு செலவிட்டார் என்பதை நான் குறிப்பிட்டதே இல்லை”, என்றாரவர்.