மேல்முறையீட்டு நீதிமன்றம் பேராக் மாநில சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு எதிராக நிந்தனையான சொற்களை கூறியது சம்பந்தப்பட்ட தேசநிந்தனை வழக்கில் எதிர்வாதம் புரியுமாறு தமக்கு இட்ட உத்தரவை எதிர்த்து கர்பால் சிங் இன்று மேல்முறையீட்டிற்கான அறிவிப்பை பதிவு செய்தார்.
“இன்று காலையில், புத்ரா ஜெயா மேல்முறையீடு நீதிமன்ற பதிவகத்தில் அந்த மேல்முறையீடு அறிவிப்பு பதிவு செய்யப்பட்டது”, என்று கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கர்பால் கூறினார்.