“பொய்யான செய்தியை வெளியிட்டதற்காகவும் கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டதற்காகவும் டிவி 3ஐ அழைத்து அதனை உள்துறை அமைச்சர் கண்டிப்பாரா?
டிவி 3 மதம் மாற்றச் செய்தி பொய் என்கிறது ஒர் என்ஜிஒ
அப்டூயூ: தகராற்றை உருவாக்குகின்றவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் களத்தில் எந்தப்பக்கத்தில் இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகள் தயங்கக் கூடாது.
இது போன்ற முட்டாள்தனமான காரியத்தை மற்றவர்கள் செய்யாமல் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியாமாகும். டிவி 3 மனிப்புக் கேட்க வேண்டும்.
ஹலோ: டிவி 3 பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களே, என்ன செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் டிவி 3ஐ நிறுத்தி வைக்கப் போகின்றீர்களா அல்லது அதன் அனுமதியை மீட்டுக் கொள்ளப் போகின்றீர்களா? இன சமய பதற்றத்தை உருவாக்கியதாக அதன் மீது குற்றம் சாட்டப் போகின்றீர்களா?
ஸ்டீவன் மலேசியா: சமயப் பதற்ற நிலையை உருவாக்குவதின் வழி முஸ்லிம்களை அச்சுறுத்தி பக்காத்தான் ராக்யாட்டுக்கு அவர்கள் வாக்களிக்காமல் செய்வதற்கு அம்னோ வகுத்துள்ள தீய தந்திரமே அது.
அடையாளம் இல்லாதவன்: கிறிஸ்துவர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்த டிவி 3 அந்த அளவுக்குப் போயிருப்பது அதன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. அத்தகையத் தீய நோக்கம் கொண்ட ஊடக நடவடிக்கையை நல்ல சிந்தனை கொண்ட மலேசியர்கள் யாரும் ஆதரிக்கவே மாட்டார்கள்.
குழப்பம் இல்லாதவன்: 1950ம் ஆண்டுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒர் ஆட்சியின் குரலாக இருக்கும் அதனிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் டிவி 3ன் அனுமதியை உடனடியாக ரத்துச் செய்து அதன் மூத்த அதிகாரிகளை நீக்க வேண்டும். நிச்சயமாக எதுவும் வழக்கம் போல் நடைபெறப் போவதில்லை. மூளை மழுங்கிவிட்ட உள்துறை அமைச்சர் மீண்டும் ஊமையாக இருக்கப் போகிறார்.
ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அம்னோ எடுபிடியான டிவி 3-யிடமிருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதன் ஆசிரியர்களும் நிருபர்களும் சிறிய பணத்துக்குக் கூட விலை போகின்றவர்கள். அவர்களுக்கு நேர்மை, நன்னெறி, சுதந்திர உணர்வு ஏதுமில்லை. அவர்கள் எஜமானருடைய குரல்.
ஸ்விபெண்டர்: பொய்யான செய்தியை வெளியிட்டதற்காகவும் கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டதற்காகவும் டிவி 3ஐ அழைத்து அதனை உள்துறை அமைச்சர் கண்டிப்பாரா? டிவி 3 பொது மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோருவாரா?
ரமதான் உணவுகள் பற்றிய சிறப்பு இணைப்பில் ஹலால் அல்லாத உணவு விடுதிகளையும் சேர்த்ததற்காக அவர்கள் அண்மையில் ஸ்டார் நாளேட்டின் மீது வேகமாக நடவடிக்கை எடுத்ததை நினைத்துப் பாருங்கள்.
கொம்பாஸ்: அரசாங்கம் 10 நாட்களுக்குள் அந்த டிவி நிலையம் மீது குற்றம் சாட்டாவிட்டால், பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களிக்குமாறு நான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்வேன்.