பக்காத்தான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் என்எப்சிமீது ஆர்சிஐ

டிஏபி ஆட்சிக்கு வந்தால், அரசு  எளிய நிபந்தனைகளில் வழங்கிய ரிம250மில்லியன் கடன்தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்படும் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

“மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் இது பற்றிப் பேசினேன். என்எப்சி விவகாரத்துக்கு திருப்திகரமான பதில் இல்லையென்றால் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புத்ரா ஜெயாவில் அமையும் பக்காத்தான் அரசாங்கம் ஆர்சிஐ அமைத்து விசாரணை நடத்த அவரும் ஒப்புக்கொண்டார்”, என்று லி குறிப்பிட்டார்.

நேற்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் அந்த விவகாரம் குறித்து ஆராய ஆர்சிஐ தேவையில்லை என்று கூறியிருந்ததை அடுத்து லிம், இன்று விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

கிம்மாஸில் நாட்டின் மிகப் பெரிய மாட்டிரைச்சி உறபத்தி செய்யும் மையத்தை அமைக்கும்  முடிவுசெய்யப்பட்டபோது முகைதின் விவசாயம், விவசாயம்  சார்ந்த தொழில் அமைச்சராக இருந்தார் என்பதால் என்எப்சி விவகாரத்தில் முடிவெடுக்கும் விசயங்களில் அவர் சம்பந்தப்படக்கூடாது என்று லிம் குறிப்பிட்டார்.

TAGS: