சீனப் புத்தாண்டு நிகழ்வின் போது சீனர்கள் கெட்டது எனக் கருதும் வெள்ளை நிற கடித உறையில் அங் பாவ் வழங்கியது, தவறாக நிகழ்ந்து விட்டது என்றும் அதில் தீய நோக்கம் ஏதுமில்லை என்றும் பெர்க்காசா கூறுகிறது.
“பெர்க்காசாவைப் பொறுத்த வரையில் வெள்ளை நிறம் தூய்மையையும் புனிதத்தையும் உண்மையையும் குறிக்கிறது. அதனால் தான் நாங்கள் அந்தக் கடித உறைகளை இன்னொரு நிறத்துக்கு மாற்றவில்லை.
நல்லடக்கச் சடங்குகளில் வெள்ளை நிறக் கடித உறைகள் பயன்படுத்தப்படுவது பெர்க்காசாவுக்குத் தெரியாது.”
“எங்களுக்கு அது தெரிந்திருந்தால் நாங்கள் வெள்ளை நிறத்தை பயன்படுத்தியிருக்க மாட்டோம்,” என பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி இன்று காலை விடுத்த ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நடவடிக்கை உண்மையானது என்றும் வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.