ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வெடித்த மூன்று குண்டுகளில் வான வேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் இருந்ததை இரசாயன ஆய்வுகள் காட்டியுள்ளன.
அந்தத் தகவலை துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் இன்று வெளியிட்டார்.
அந்தக் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை இரசாயன சோதனைகள் உறுதி செய்துள்ளதாக அவர் சொன்னார்.
அந்தக் குண்டுகள் நேரக் கருவியுடன் வெடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காரணமாக வெடிப்புக்கள் கடுமையானதாக இல்லை என்று அவர் சொன்னதாக தி ஸ்டார் ஆன்லைன் கூறியது.
அந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணை இன்னும் தொடருகிறது. குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்கு உதவும் தகவல்களை வழங்குவோருக்கு 10,000 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தும் இது வரை யாரும் அவ்வாறு முன் வரவில்லை என்றும் காலித் சொன்னார்.