உலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார்.

முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.

ஒரு கண்ணுக்கு கண் என்று இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் கருணையானது மகாத்மா காந்தி அவர்களின் கருத்தை நிலைநாட்டுவது மற்றும் அல்லாமல் இந்தியாவின் பெருந்தன்மையை உலகத்திற்கும் எடுத்துக் கூறும். 

காந்தி அவர்களின் கொலையிலும் அது விசாரிக்கப்பட்ட முறையிலும் பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் பலராலும் எழுப்பப்பட்டுள்ளன.

உலக தமிழர் பேரவையானது இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம் மற்றும் இதர அனைத்லுக மனித உரிமைகள் அமைப்புகள் கொடுமையான மனித தன்மையற்ற, இழிவுபடுத்தப்படும் தன்டனைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது.

எனவே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு கருணை காட்டுவதே அனைத்துலக சமூகத்தில் பலராலும் வரவேற்க்கப்படுகிறது.

நன்றி.

உலகத் தமிழர் பேரவை