‘அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் கொடுத்துள்ளார்’

ஒர் அம்னோகாரர் கூட வெள்ளை உறைகளில் அங் பாவ் விநியோகம் செய்வது கேமிராவில் பதிவாகியுள்ளதை பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர், சினார் ஹரியான் நாளேட்டின் 38வது பக்கத்தில் ஸ்ரீ செத்தியா பிஎன் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹலிம் சமாட்-டிடமிருந்து 100 ரிங்கிட் வைக்கப்பட வெள்ளை அங் பாவ்-களை ஸ்ரீ செத்தியா குடியிருப்பாளர்களுக்கு வழங்கியதை காட்டும் படம் வெளியாகியிருப்பதைக் காட்டினார்.

பணம் கொடுத்ததற்காக அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு தாமான் டத்தோ கிராமாட் குடியிருப்பாளரான 57 வயது லோ மியூ சின்  நன்றி கூறியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பெர்க்காசா கூறும் அந்தக் குற்றச்சாட்டை அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மசீச கெளானா ஜெயா தொகுதி தலைவர் ஒங் சொங் ஸ்வன் மறுத்தார்.

அது மாறுபட்ட நிகழ்வாகும். வெள்ளை நிற கடித உறைகளில் தாம் அங் பாவ் வழங்கியது மீது எழுந்துள்ள சர்ச்சையை மறைப்பதற்கு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி ‘முயலக் கூடாது’ என  ஒங் சொன்னார்.

“இப்ராஹிம் தமது சொந்தத் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும். மற்றவர்களை அதில் இழுக்கக் கூடாது.”

அப்துல் ஹலிம் பயன்படுத்திய வெள்ளை கடித உறைகள் உண்மையில் அச்சிடப்பட்டவை. அவற்றில் பிஎன், அம்னோ சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என அவர் விளக்கினார்.

அவை பெர்க்காசா பயன்படுத்திய சுத்தமான வெள்ளை நிறக் கடித உறைகளிலிருந்து மாறுபட்டவை என அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் சீனப் புத்தாண்டின் போது மட்டுமின்றி அவற்றை ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறோம்.” “நாங்கள் அவற்றை நோன்புப் பெருநாள், தீபாவளி ஆகியவற்றின் போதும் பயன்படுத்துகிறோம். நன்கொடைகளை வழங்கும் போதும் அவற்றைப் பயன்படுத்துகிறோம். அது இப்ராஹிம் அலியின் நடவடிக்கைகளிலிருந்து மாறுபட்டவை,” என ஒங் தொடர்ந்து கூறினார்.

TAGS: