ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது

சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக்  கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது.

இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த இலாகாவிற்கு நேற்று வரும்படி கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால், எவரும் வரவில்லை.

இப்போது அவர்கள் கைது செய்யப்படுவதற்கான ஆணை வெளியிடப்படும் என்று விசாரணை மற்றும் அமலாக்கம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஜயிஸின் துணை இயக்குனர் ஷாரும் மரோப் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கியிருந்தோம். அவர்கள் வருவதற்கு ஜயிஸுடன் தொடர்பு கொண்டிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

ஜயிஸின் விசாரணைக்கு உதவ வேண்டாம் என 12 பேருக்கும் அவர்களின் வழக்குரைஞர்கள் ஆலோசணை வழங்கியிருப்பதாக ஷாரும் கூறிக்கொண்டார்.