“ஃபொமெமா-வுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குக் கட்டணம் ரிம120 ஆக இருந்தது.அது தனியார்மயமானதும் கட்டணம் ரிம190 ஆக எகிறியது”.
1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரின்றனர்,உடல்நலப் பராமரிப்பு வியாபாரப் பொருளல்ல
அனைவருக்கும் நியாயம்: 1பராமரிப்புத் திட்டத்தை எதிர்க்கும் குடிமக்கள் உடல்பராமரிப்புக் கூட்டமைப்புக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.அரசாங்கத்துக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது. தனக்கு வேண்டியவர்கள் மக்களின் பணத்தை மேன்மேலும் கொள்ளயடிப்பதற்கு வசதியாக மோசடித் திட்டங்களை அது அவ்வப்போது அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
வேலை இல்லாதிருப்பவர்கள், உடல்நலப் பராமரிக்கு எங்கு செல்வார்கள்? ஏழைகள், வயதானவர்களின் நிலை என்னவாகும்?
இத்திட்டப்படி ஒரு நோயாளி ஒரு மருத்துவரை மட்டுமே பார்க்க முடியும். வேறொரு மருத்துவரிடம் செல்ல முடியாது. அதுவும் ஒரு மருத்துவரை ஆண்டுக்கு ஆறு தடவை மட்டும்தான் பார்க்க முடியும்.
இதற்காக நாம் நம் மாதச் சம்பளத்திலிருந்து 10விழுக்காட்டை வழங்க வேண்டும் என அரசு விரும்புகிறது.
உங்கள் மாதச் சம்பளம் ரிம2,000 என்றால் அதிலிருந்து ரிம200 மாதந்தோறும் வெட்டப்படும். ஆக, ஆண்டுக்கு ரிம2,400 வெட்டப்படும். ஆண்டுக்கு மருத்துவரை ஆறு தடவைத்தான் பார்க்கலாம் என்பதால் இதை ஆறால் வகுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு தடவையும் மருத்துவரைப் பார்ப்பதற்காகும் கட்டணம் ரிம400 ஆகிறது. இக்கட்டணம் தலைசுற்ற வைக்கிறது. தனியார் மருத்துவ மனைகள்கூட இவ்வளவு கட்டணம் கேட்பதில்லை.
மேபல்சிரப்: மலேசியாவில் அவ்வப்போது ஒன்று தனியார்மயமாக்கப்படும்போது, அது மலேசியர்களுக்கு மேலும் தரமான வாழ்க்கைநிலையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்தால் நாம்தான் அதற்குக் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதாகிறது.சாலைக் கட்டணங்கள் இதற்கோர் எடுத்துக்காட்டு.
இண்டா வாட்டர்? இண்டாவாட்டருக்குமுன்பு நிலவரி/மதிப்பீட்டு வரி கட்டுவோம். அரசாங்கம் மற்ற சேவைகளையெல்லாம் வழங்கும். பின்னர், தனியார் மயம் வந்தது. இப்போது மாதம் ரிம8 கூடுதலாக செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஃபொமெமா மருத்துவத் திட்டம் மட்டும் என்னவாம்? ஃபொமெமா-வுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குக் கட்டணம் ரிம120 ஆக இருந்தது. அது தனியார்மயமானதும் கட்டணம் ரிம190 ஆக எகிறியது. நாம் இப்போது ரிம70 கூடுதலாக செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
மலேசிய அரசின் கடந்த கால செயல்பாட்டை வைத்துப் பார்க்கும்போது 1பராமரிப்புத் திட்டமும் படுத்துக்கத்தான் போகிறது.
தனிக்காட்டு ராஜா: மக்கள் எது நல்லதோ அதற்காக போராட வேண்டும்.1பராமரிப்புத் திட்டம் பற்றி உங்களுடைய கருத்தை உங்கள் எம்பிகளிடம் தெரிவியுங்கள்.
1பராமரிப்புத் திட்டம், அரசாங்கம் அதன் சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கப் பார்ப்பதைத்தான் காண்பிக்கிறது.பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதாரத் திட்டம்(என்எச்எஸ்) உடல்பராமரிப்புத் திட்டங்களுக்கு முன்மாதிரியாக அமையும் அளவுக்கு ஒரு தரமான திட்டம் அல்ல. அதுவே குளறுபடி நிலையில் உள்ளது. ஏன், பிஎன் அரசு அதைப் பின்பற்ற நினைக்கிறது?
1பராமரிப்பு வேண்டாம் என்று சொல்லுங்கள். பிஎன் வலுக்கட்டாயமாக அதை அமல்படுத்தினால் பிஎன்னையும் வேண்டாம் என்று ஒதுக்குங்கள்.
மாவீரன்: மக்களைக் கொள்ளையிட மேலும் ஒரு தீய திட்டம். மொத்த மலேசியரின் வருமானத்தில் 10 விழுக்காடு….அது எவ்வளவு பெரிய தொகை. பங்குபெறும் தரப்புகள் கற்பனைக்கெட்டாத செல்வத்தை விரைவாக வாரிக் குவிக்க வகைசெய்யும் திட்டம் இது.
பி.தேவ் ஆனந்த் பிள்ளை: ஏழைகளும் கம்பத்து மலாய்க்காரர்களும் என்ன நடக்கிறதென்பதையே அறிய மாட்டார்கள். மருத்துவமனை செல்லும்போதுதான் அவர்களுக்குத் தெரியவரும். அங்கு சென்றதும் சிகிச்சையைத் தொடங்குவதற்குமுன் பணம் கேட்பார்கள் அல்லது காப்புறுதி அட்டையைக் கேட்பார்கள்.அப்போதுதான் அவர்களுக்கு உண்மை தெரியவரும்.
டாக்: ஒரு மருத்துவன் என்ற முறையில் இந்த 1பராமரிப்புத் திட்டம் (இப்போது அதிகம் பேசப்படாத நஜிப்பின் 1மலேசியா கிளினிக் திட்டம்போல்) ஓர் அரைவேக்காட்டுத் திட்டம் என்றுதான் சொல்வேன். இது நிச்சயம் விழுந்து படுத்துக்கொள்ளப் போகிறது.
பெரும்பாலான மருத்துவர்கள் இதை எதிர்க்கிறார்கள் (டாக்டர் மகாதிர் விதிவிலக்காக இருக்கலாம்).இது சில அரசியல்வாதிகளை வேண்டுமானால் பணக்காரர்களாக்கலாம். ஆனால், துன்பமெல்லாம் மக்களுக்குத்தான். அவர்கள்தான் இதற்குப் பணம் கொடுக்கப்போகின்றவர்கள். கொடுக்கும் பணத்துக்குத் தரமான சேவை கிடைக்குமா என்றால் தரக்குறைவான சேவைதான் கிடைக்கப்போகிறது.
இத்திட்டத்தில் நிதி நிர்வாகம் சரியில்லை என்றால் மருத்துவர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய கட்டணம் நிறுத்தப்படலாம்.
அது நின்றால் இத்திட்டமும் (ஏனைய பல அம்னோ-பிஎன் திட்டங்கள் போல) தோல்வியுறும். ஆனால், பழியை மருத்துவர்கள்மீது போட்டு அவர்களைப் பலிகடா ஆக்கிவிடுவார்கள்.