உத்தேச “ஒரே மலேசியா ஒரே பராமரிப்பு” (1Care for 1Malaysia) சுகாதார கவனிப்புத் திட்டத்தில் எல்லா மலேசியர்களும் சேருவது கட்டாயமாக்கப்படும். என்றாலும் அந்தத் திட்டத்தை அமலாக்குவதற்கான வழி முறைகளை அரசாங்கம் இன்னும் தயாரிக்கவில்லை.
இவ்வாறு சுகாதார அமைச்சில் உள்ள தேசிய சுகாதார நிதி அளிப்புப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் ரொஸித்தா ஹாலினா ஹுசேன் கூறுகிறார்.
“சுகாதார கவனிப்புக்களை வழங்குகின்றவர்களுக்கு அது கட்டாயமல்ல. ஆனால் மக்களுக்கு அது கட்டாயமாகும்,” என்றார் அவர்.
அந்த திட்டத்துக்கான சந்தாத் தொகை கூடின பட்ச அளவுக்குக் கிடைப்பதை உறிது செய்வதும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதும் அதன் நோக்கம் என்றும் ரொஸித்தா குறிப்பிட்டார்.