கிளந்தான் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக மாற்றுகிறது

பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக கிளந்தான் பாஸ் அரசாங்கம் மாற்றியுள்ளது.

அந்த மாற்றம், இஸ்லாமியப் போதனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாலும் குடும்ப அமைப்பை அது வலுப்படுத்தும் என்பதாலும் மிகவும் பொருத்தமானது என கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறினார்.

“எதிர்காலத்தில் நாங்கள் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். அது ஆண்டு நிகழ்வாக இருக்கும்,” என அவர் கோத்தாபாருவில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

இன்னொரு நிலவரத்தில் ஜைட் இப்ராஹிம் தமது கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air கட்சியைக் கலைத்தால் அவருடன் இணைந்து பணியாற்ற பாஸ் கட்சி தயாராக இருப்பதாக பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் சொன்னார்.

“சீனர்களுடனும் இந்தியர்களுடனும் பாஸ் இணைந்து வேலை செய்யும் முடியும் என்றால் நாம் ஏன் ஜைட்-டுடன் ஒத்துழைக்க முடியாது,” என அவர் வினவினார். என்றாலும் இறுதி முடிவு பாஸ் உயர் நிலைத் தலைமைத்துவத்தைப் பொறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கீத்தா கட்சியின் சில தரப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தக் கட்சியைக் கலைக்க தாம் எண்ணம் கொண்டுள்ளதாக ஜைட் தமது அண்மைய வலைப்பதிவில் அறிவித்துள்ளார்.

பெர்னாமா