சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு அல்கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
காணொளி செய்தி ஒன்றில் உரையாற்றியுள்ள அவர், சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பினர் மேற்கு நாடுகளிலோ அல்லது ஏனைய அரபு நாடுகளிலோ உதவிக்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சுதந்திரமான சிரியாவின் மக்களை மூழ்கடித்துள்ள ஒரு புற்றுநோய் பிடித்த ஆட்சியாக சிரியாவின் ஆட்சியை விபரித்துள்ள அவர், முஸ்லிம்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதனைத் தாம் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
ஈராக்கில் இருந்து சிரியாவுக்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் சென்றுள்ளதாக செய்திகள் சில கூறுகின்றன. சிரியாவில் அண்மையில் நடந்த சில குண்டுத் தாக்குதல்கள் அல்-கைதாவினால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.