மலேசியப் பங்குச் சந்தையின் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்கானது. பலமுனைகளிலிருந்தும் போக்குவரத்து அளவுமீறி பெருகியதால் பயனர்கள் அந்த இணையத்தளத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக பங்குச் சந்தை இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
நேற்று பயனர்கள் பலரும் பார்க்க முடியாதவாறு தன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது என புர்ஸா மலேசியா கூறியது.
“அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இணையத்தளத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்கு வகை செய்யப்பட்டது”, என்றது கூறியது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இன்னமும் இணையத்தளத்தைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கலாம்.ஆனால் உள்நாட்டுப் பயனர்கள் இணையத்தளத்துக்குள் செல்வதில் பிரச்னைகள் இருக்காது என்றது கூறியது.
தன் மற்ற சேவைகள்- பங்கு விற்பனை, இஸ்லாமிய சந்தைகள் போன்றவை பாதிக்கப்படாமல் வழக்கம்போல் செயல்படுவதாக புர்ஸா மலேசியா மேலும் கூறியது..