லியோ: 1பராமரிப்புப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறி அச்சுறுத்துகின்றனர்

சில தரப்பினர், 1பாராமரிப்புத் திட்டம் தொடர்பில் தப்பும்தவறுமான தகவல்களைக் கூறிப் பொதுமக்களைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள் என்கிறார் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய்.

“அவ்விவகாரம் தொடர்பில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்பி வருகிறார்கள்.எடுத்துக்காட்டுக்கு, பணியாளர்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் லியோ கூறினார்.

அத்திட்டத்துக்கான பணம் மொத்தத்தையும் பணியாளர்கள் மட்டுமே கொடுக்கப்போவதில்லை. அரசாங்கம், பணி அளிப்போர், பணியாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் அதற்குப் பங்களிப்பைச் செய்வர் என்றவர் விளக்கினார்.

மேலும், உத்தேச திட்டம் இன்னும் தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளது.அதன் தொடர்பில் விவரங்கள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.  

தவறான தகவல் பரப்பி வருவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டம் உண்டா என்றும் அவரிடம் வினவப்பட்டது. நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தம் அமைச்சு சரியான தகவல்களை அளிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.