அதிகாரத்தில் நிலைத்திருக்க பிஎன் சமய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது

“தாங்கள் அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு இன, சமய வெறுப்புணர்வை தூண்டும் அளவுக்கு அந்த அரசியல்வாதிகள் பொறுப்பற்றவர்களா?”

 

 

சிலாங்கூர் மந்திரி புசார்: முஸ்லிம் அல்லாதார் எதிரிகள் அல்ல

ஜெர்னிமோ: நான் இந்த ஆண்டு என் முஸ்லிம் நண்பர்களுடைய வீடுகளுக்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை அல்லது சிலாமாட் ஹரிராயா வாழ்த்துச் சொல்வதற்கு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமா?

அதற்கு என்ன காரணம்- முஸ்லிமாக மதம் மாற்றப்படக் கூடும் என்ற அச்சமே அதற்குக் காரணம். அந்த வேறுபாட்டை உருவாக்கிய அம்னோவுக்கு நன்றி.

நிக் வி: முதிர்ச்சியையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோள் ஒர் உண்மையான தலைவரை காட்டுகிறது.

இந்த உலகத்தையே மாற்ற விரும்பும் தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் இருப்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

முதிர்ச்சி அடைந்த மக்கள் என்னும் முறையில் அது மலேசியாவில் உள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் ஆகியோரது எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் ஆகியோர், ஒருவர் மற்றவருடைய சமயத்தை மதிக்கின்றனர். நமது பல இன நாட்டில் ஒர் அங்கமாகி விட்ட பெருநாட்களையும் விடுமுறைகளையும் நாம் உண்மையில் அனுபவிக்கிறோம்.

அரசாங்கத்திலும் எதிர்த்தரப்பிலும் நம்மை தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டும் தீவிரவாதிகளுக்கு நாம் பலியாகி விடக் கூடாது. நாம் முதிர்ச்சி அடைந்து வரும் நாட்டைச் சேர்ந்தவர்கள். நாம் அழிவுச் சக்திகளுக்கு எதிராக துணிச்சலுடன் நிற்க வேண்டும்.

அப்டூயூ: முதலில் டிவி 3, அடுத்து டிவி 1. இத்தகைய இழிவான செய்திகளை வெளியிடும் அளவுக்கு அதிகார வர்க்கம் விரக்தி அடைந்து விட்டதா? தாங்கள் அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு இன, சமய வெறுப்புணர்வை தூண்டும் அளவுக்கு அந்த அரசியல்வாதிகள் பொறுப்பற்றவர்களா?

அடையாளம் இல்லாதவன்: சாதாரண மக்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பழகுகிறோம். ஒற்றுமையாக வாழுமாறு நமக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. அரசியல்வாதிகளே எல்லாக் குட்டைகளையும் குழப்பி விட்டு மீன் பிடிக்க முயலுகின்றனர்.

TAGS: