அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அலி அறிவித்துள்ளார்.
என்றாலும் பாசிர் மாஸ் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள அதில் நிற்பதா அல்லது வேறு இடத்தில் களம் இறங்குவதா என்பதையும் சுயேச்சை வேட்பாளாராக நிற்பதா அல்லது எந்த அரசியல் கட்சியையும் பிரதிநிதிப்பதா என்பதையும் தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.
பாசிர் மாஸில் நேற்றிரவு சீன சமூகத்தை சந்தித்த பின்னர் இப்ராஹிம் நிருபர்களிடம் பேசினார்.
தமக்கும் தாம் தலைமை தாங்கு மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசாவுக்கும் சீனர்கள் அளிக்கும் ஆதரவு, தாம் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாசிர் மாஸ் தொகுதியில் 2008ம் ஆண்டு பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் வெற்றி பெற்றார்.
அவர் பிஎன் சார்பில் நிறுத்தப்பட்ட அகமட் ரோடி மாஹ்மாட்-டை 8,991 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
பெர்னாமா