“இரண்டாவது சுற்று பினாங்கில் நடைபெற்றால் நியாயமாக இருக்கும். இரண்டு கட்சிகளுக்கு சமமான வாய்ப்பும் கொடுக்கப்பட வேண்டும்”
சுவா விவாதத்தில் வென்றதாக கெரக்கான் துணைத் தலைவர் சொல்கிறார்
ஜேபி சுவாரா: பிஎன் உறுப்புக் கட்சி உறுப்பினர் ஒருவர் சொல்லும் தீர்ப்புக்கு மதிப்பே இல்லை. கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யூவான் தனது வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அத்தகைய விவாதங்களில் யார் வெற்றி பெற்றார் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அந்த விவாதம் நடப்பு விவகாரங்களை நாம் புரிந்து கொள்ளவும் நமது அரசியல் தலைவர்களுடைய நிலையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது.
பல இனம்: அந்த விவாதத்தில் சுவா அதிகாரப்பூர்வமில்லத வெற்றியாளர் எனச் சாங் அறிவித்ததைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். வியப்படைந்தேன். சாங் தம்மை ஒரு கேலிப் பொருளாக ஆக்கிக் கொண்டார்.
முதலாவதாக அவர் பாகுபாடு காட்டுவது நமக்கு நன்கு தெரியும். இரண்டாவதாக அவர் தமது பிஎன் சகாக்களைத் திருப்திப்படுத்த முயலுகிறார். மூன்றாவதாக டிஏபி அதிகமான இடங்களை வெண்றால் மசீச, கெரக்கான் அரசியல்வாதிகளே அதிக இழப்பை எதிர்நோக்குவர்.
எது எப்படி இருந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. அந்த விவாதம் நியாயமாக நடத்தப்படவில்லை. குறிப்பாக இருக்கை ஒதுக்கீடுகள், ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக கேள்வி கேட்க பார்வையாளர்களை அனுமதித்தது ஆகியவை நியாயமாகத் தெரியவில்லை.
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் ஏன் மசீச உறுப்பினர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டது அம்னோவைச் சார்ந்தவர்கள் யாரும் ஏன் இல்லை என்று லிம் சுவாவை வினவிய போது அது இன அடிப்படையிலான கேள்வி என்றும் அதற்குத் தாம் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் சுவா கூறினார்.
லிம் எழுப்பிய கேள்வி இன அடிப்படையில் அமைந்தது அல்ல என்பது நிச்சயம். எல்லா மலேசியர்களையும் போன்று அந்த ஊழலில் அம்னோவையும் மசீச-வையும் சேர்ந்த பலர் சம்பந்தப்பட்டுள்ள வேளையில் ஏன் மசீச-வை சார்ந்தவர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டப்பட்டது என்பதை அறிந்து கொள்ள நாமும் விரும்புகிறோம். ஆனால் அதற்கு சுவா-விடம் பதில் இல்லை என்பது நமக்கு நன்கு தெரியும்
சிவிக்: பாஸ். டிஏபி, பிகேஆர் பற்றி டாக்டர் சுவா சொய் லெக் கேள்வி எழுப்பிய போது டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமக்கு விரிக்கப்பட்ட இனவாத வலைக்குள் மாட்டிக் கொள்ளாமல் கெட்டிக்காரத்தனமாகப் பதில் அளித்தார்.
ஆனால் லிம் மசீச், அம்னோ பற்றிக் குறிப்பிடும் போது அது இனவாதக் கருத்து எனக் கூறிப் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.
இதில் யார் முதிர்ச்சி அடையாதவர். ஒன்று மட்டும் நிச்சயம். லிம் தெளிவாக கூறினார்: “அம்னோ
மலாய்க்காரர்களைக் கவனிக்கிறது, மசீச சீனர்களைப் பார்த்துக் கொள்கிறது, மஇகா இந்தியர்கள் மீது கவனம் செலுத்துகிறது, கெரக்கான் யாரைக் கவனிக்கிறது ?”
டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவை நிச்சயமாக மலேசியர்களை கவனித்துக் கொள்ளும்.
பிரான்ஸிஸ்_14a3: நீங்கள் விவாதத்தில் வெற்றி பெறலாம். ஆனால் வாக்காளர் என்ற முறையில் நானும் என் குடும்பமும் என் நண்பர்களும் டோல் கட்டணம் இல்லாமல், எண்ணெய் விலைகளைக் குறைத்து, மாதம் ஒன்றுக்கு10 ரிங்கிட் உதவித் தொகை வழங்கும் கட்சியையே நாடுகிறோம். அதனால் எங்கள் அன்றாடச் செலவுகள் குறையும். ஆகவே காரியமே மிகவும் முக்கியம்.
கங்காரு: இதில் போட்டி ஏதுமில்லை. ஆகவே யார் வென்றார் யார் தோல்வி அடைந்தார் என்ற கேள்வியே எழவில்லை. பொதுத் தேர்தலில் தான் வெற்றி தோல்வி ஒரு பொருட்டாகும்.
நியாயம்: இரண்டாவது சுற்று பினாங்கில் நடைபெற்றால் நியாயமாக இருக்கும். இரண்டு கட்சிகளுக்கு சமமான வாய்ப்பும் கொடுக்கப்பட வேண்டும்.