மலேசியாவில் அம்னோபுத்ராக்களைத் தவிர மற்ற அனைவரும் ஒரங்கட்டப்படுகின்றனர்

 “மசீச, மஇகா, சபா, சரவாக்கில் உள்ள கட்சிகள் ஆகியவற்றின் சாதாரண உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது.”

 

 

 

 

வில்கிலீக்ஸ்: சீனர்கள் ஒரங்கட்டப்படுவதை மசீச ஒப்புக் கொள்ள முடியாது

அபாசிர்: மசீச தலைவர்கள், மஇகா, கெரக்கான் தலைவர்களைப் போன்று அம்னோவிடமிருந்து விலகவே முடியாது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அதுதான் சுயநலம். எடுத்துக்காட்டுக்கு சீரான வருமான வழியைப் பாதுகாத்துக் கொள்வது, பதவிகளுடன் வருகின்ற முறையான முறையில்லாத சகாயங்கள், பக்கத்தில் ஏதாவது தொழில் செய்வதற்கு வழி, டத்தோ அல்லது தான்ஸ்ரீ பட்டங்கள், பிஎன்-னில் இணைந்திருப்பதால் கிடைக்கும் வர்த்தக, சமூக நன்மைகள் ஆகியவற்றைக் கூறலாம்.

‘வேலி பயிரை மேய்ந்த கதை என்பது அம்னோவுக்கு நன்கு தெரியும். அந்த ஆட்டம், பட்டங்கள், பதவிகளுக்கு எளிதில் பலியாகி விடக் கூடிய முட்டாள் வாக்காளர்களுடன் அந்த ஆட்டம் தொடருகிறது.

கேகன்: தனக்கு மிச்சம் கிடைத்து வந்த காலம் போய் இப்போது துண்டுகளே கிடைப்பதை மசீச ஒப்புக் கொண்டுள்ளது.  விரைவில் அது அம்னோவின் ஒரத்திலிருந்து விழும் ‘கழிவுகளாக’ இருக்கப் போகிறது.

பையுன்செங்: அரசாங்கத்தில் சீனர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்பது பெரிய விஷயமல்ல. சீனர்கள் ஏற்கனவே அரசாங்கத்தினால் ஒரங்கட்டப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர். ஒராங் அஸ்லிகளுக்கும் சபா, சரவாக்கில் உள்ளவர்களுக்கும் அது பொருந்தும். அவர்களும் பிஎன் மலாய்க்காரர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர்.

பிஎன்-னுக்கு எதிராக நாம் வாக்களிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. சம நிலை, நியாயம், அனைவருக்கும் நீதி ஆகியவற்றைப் பின்பற்றுகின்ற மலாய்க்காரர்களை நாம் தேர்ந்தெடுப்போம்.

கலா: 2008க்குப் பின்னர் எதுவும் மாறவில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் மசீச பெரிய அளவில் தோல்வி காணும். அதன் வேட்பாளர்கள் அனைவரும் துடைக்கப்பட்டு விட்டால் கூட வியப்பு இல்லை. அதற்கு பின்னர் அந்த கட்சி வெறும் பூஜ்யம்தான். தேசியத் தொல் பொருள் கூடத்துக்குச் சென்றால் மட்டுமே அது நினைவுக்கு வரும்.

பல்வேறு விஷயங்களில் மசீச ஆழ்ந்த மௌனம் அனுசரிப்பது, அம்னோவின் பாகுபாடான கொள்கைகளை அது அங்கீகரிப்பதாகப் பொருள்படுகிறது. ஆகவே அநியாயமான கொள்கைகளில் மசீச-வுக்கும் பங்கு உண்டு.

சுஸாகேஸ்: ஒங், நீங்கள் அப்போது ஏன் இப்போது கூட நீங்கள் அம்னோ பாடும் பல்லவிக்கு ஆடிக் கொண்டு தான் இருக்கின்றீர்கள். துண்டுகளுக்காக காத்திருப்பதாக எங்களுக்குச் சொல்ல வேண்டாம்?

அடையாளம் இல்லாதவன்: மசீச, மஇகா, கெரக்கான, எல்லாம் அம்னோ அடிமைகள், எடுபிடிகள். அவற்றின் தலைவர்கள் தங்கள் எஜமானர் அம்னோ வழங்கும் பட்டங்களுக்கும் பண வெகுமதிகளுக்கு ஏங்கிக் கிடக்கும் சுயநலப் போக்குடையவர்கள். அந்த முட்டாள்களுக்கு இன்னும் கௌரவமும் பெருமையும் இருந்தால் பிஎன்-னிலிருந்து விலக வேண்டும்.

டிகேசி: “அம்னோ மேசையிலிருந்து விழும் துண்டுகளை மசீச பெறுகிறது” என ஒங் சொல்லும் போது அவர் அரசியல் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்.

உண்மையில் இன வம்சாவளி வேறுபாடின்றி பெரும்பாலான மலேசியர்கள், அவர்கள் அம்னோ, மசீச, மஇகா, பிஎன் உறுப்புக் கட்சிகளில் இல்லாவிட்டால் ஒரங்கட்டப்படுகின்றனர்.

வெள்ளித் தாம்பாளத்தில் அரசாங்கத்திடமிருந்து திட்டங்களைப் பெறாத நாம் அதற்காக ஒலமிடுகிறோமா? இல்லையே  கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கடுமையாகவும் விவேகமாகவும் உழைத்து முன்னேறுகிறோம். கால ஒட்டத்தில் அதனை நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்கிறோம்.

அடையாளம் இல்லாதவன் இஸட்: மசீச, மஇகா, சபா, சரவாக்கில் உள்ள கட்சிகள் ஆகியவற்றின் சாதாரண உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது. நீங்கள் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மிச்சத்திற்காக காத்திருந்து உங்கள் அடுத்த தலைமுறையை பணயம் வைக்க வேண்டாம். ஒரே மலேசியா சகோதர சகோதரிகளே விழித்துக் கொள்ளுங்கள்.

யாப் செங் லியாங்: மலேசியா முன்னேற வேண்டுமானால் சீனர்கள் அல்லது இந்தியர்கள்  ஒதுக்கப்படுவதாக விவாதம் நடத்தக் கூடாது. ஏனெனில் அது மலாய்க்காரர் அல்லது மலாய்க்காரர் அல்லாதார் என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

உண்மையில் அம்னோ புத்ராக்களுக்கு அணுக்கமாக இருக்கின்றவர்களைத் தவிர மற்ற எல்லோரும் ஒரங்கட்டப்படுகின்றனர்.