“நீதித் துறை இனிமேல் மாறத் தொடங்கும் என நம்புவோம். அவரது காலணி மாற்றத்தைக் கொண்டு வரும் என எண்ணுவோம்.”
வெளியேற்றப்பட்டது மீதான வழக்கில் இமாம் நீதிபதிகள் மீது காலணியை வீசினார்
செரி பன்: நீதிபதிகள் மீது காலணிகளை அல்லது பொருட்களை எறிவது தவறாகும். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் அவர் அடைந்துள்ள விரக்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தை அவமதித்தாக இமாம் மீது குற்றம் சாட்டுவதில்லை என நீதிபதிகள் முடிவு செய்துள்ளதையும் பார்க்கும் போது நீதி முறையில் ஏதோ கோளாறு இருப்பதாக தெரிகிறது.
நாம் அதனை எப்படிப் பார்த்தாலும் மலேசிய நீதி பரிபாலன முறை, கடும் பிரச்னையை எதிர்நோக்குகிறது.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: ஈராக்கில் பத்திரிக்கையாளர் ஒருவர் காலணியைத் தூக்கி எறிந்த சம்பவத்துக்குப் பின்னர் நமது நாட்டிலும் அது போன்று நிகழ்ந்துள்ளது. பரிதாபத்துக்குரிய அந்த மனிதரை நாம் குறை சொல்ல முடியாது. காரணம் அவர் தமது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படத் தொடங்காவிட்டால் அவர்களுக்கு அது நல்ல பாடமாக இருக்க வேண்டும். நீதித் துறை இனிமேல் மாறத் தொடங்கும் என நம்புவோம். ஒர் இமாம் காலணியை எறிந்தது ‘விழித்துக் கொள்ளுங்கள்’ என்பதற்கான அறைகூவல் ஆகும். அவரது காலணி மாற்றத்தைக் கொண்டு வரும் என எண்ணுவோம்.
லிம் சொங் லியோங்: ஒரு வழக்கின் நியாயம், தகுதிகள் ஆகியவற்றுக்கு மேலாக நடைமுறை விதிகள் வைக்கப்படும் போது வழக்காடும் சிலர் சிறிதளவு ஆத்திரமடைவதற்காக நாம் அவர்களைக் குறை சொல்லக் கூடாது.
அதுவும் வழக்காடுகின்றவர்களை வழக்குரைஞர் யாரும் பிரதிநிதிக்காத வேளையில் அடுக்கடுக்கான நடைமுறை விதிகளில் மூழ்கி அவர்கள் எளிதாகத் தவறு செய்யும் நிலை ஏற்படலாம்.
வழக்குரைஞர்கள் இல்லாதவர்களுக்கு குறிப்பாக எதிர்த்தரப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத சூழ்நிலையில் ஏதாவது ஒரு வழியில் சலுகை காட்டப்பட வேண்டும்.
நடப்பு நீதி: எல்லாவற்றுக்குமே கொதி நிலை என ஒன்று உண்டு. சட்ட ஆட்சி என்பது பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
பொதுவாகச் சொன்னால் நீதிபதிகள் மீதும் நீதிமன்றங்கள் மீதும் மக்களுக்கு முற்றாக மரியாதை இழந்து விட்டனர். அதனால் அந்த வகையில் இமாம் நடந்து கொண்டது பொருத்தமானதே.
அரசியல் எஜமானர்களுக்கு அடி பணியாமல் நேர்மையான முறையில் நீதி வழங்க தாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நீதிபதிகள் உண்மையாகப் பின்பற்றிய கடந்த காலத்துக்கு சட்ட, நீதி முறை மீண்டும் செல்ல வேண்டும்.
பாகிஸ்தான் அதிபருக்கு எதிராக அந்த நாட்டு தலைமை நீதிபதி துணிச்சலுடன் தீர்ப்பு வழங்கியதைப் போல அவர்கள் இயங்க வேண்டும்.
அடையாளம் இல்லாதவன்_3f94: ஒய்வு பெற்ற பின்னர் எத்தனை நீதிபதிகள் நெடுஞ்சாலை குத்தகைகளுக்காக காத்திருக்கின்றனரோ !
ஆ ஹோ: நம்பவே முடியவில்லை. காரணம் காலணியை இமாம் எறிந்ததால் அல்ல. நீதிமன்றத்தை இவ்வளவு அப்பட்டமாக அவமதித்த இமாம் மீது குற்றம் சாட்டுவதில்லை என நீதிபதிகள் முடிவு செய்ததைத் தான் என்னால் நம்ப முடியவில்லை.
எனவே மலேசிய நீதித் துறையை யாரும் மதிப்பதில்லை என்பதில் வியப்பில்லை.
என்எக்ஸ்: நமது நீதிபதிகள் வேடிக்கையானவர்கள். காலணி பொருத்தமான அன்பளிப்பு.
புரோண்டோ: முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எல்லா நீதிபதிகளும் தலைக்கவசத்தையும் பாதுகாப்பு உடையையும் அணிய வேண்டியிருக்கும். வெகு விரைவில் காலணிகளை அணிவதற்கு நமது நீதிமன்றங்கள் அனைத்தும் தடை விதிக்கக் கூடும்.