இஸ்ரேல் சார்பு நிலை எனக் கூறப்படுவது மீது இராணுவ வீரர்கள் ‘காயமடைந்துள்ளனர்’

 இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை தங்கள் மனதைக் “காயப்படுத்தியுள்ளதாக” கூறிக் கொண்டு அவருக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தை நடத்தினர்.

ஒரே மலேசியா சின்னங்களைக் கொண்ட வெள்ளை நிறச் சட்டைகளை அணிந்திருந்த அவர்களுடன் அம்னோ ஆதரவு அரசு சாரா அமைப்புக்களின் பேராளர்களும் சேர்ந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் சோகோ கடைத் தொகுதிக்கு முன்பு பிற்பகல் மணி மூன்று வாக்கில் கூடத் தொடங்கினர்.

அவர்கள்  “Anwar betrays Palestinian struggle” ( அன்வார் பாலஸ்தீனப் போராட்டத்துக்குத் துரோகம் செய்கிறார் ), “Musuh dalam selimut” ( மறைந்திருக்கும் எதிரிகள்) என்னும் வாசகங்களைக் கொண்ட பதாதைகளையும் வைத்திருந்தார்கள்.

மனுவில் கையெழுத்திடுவதின் மூலம் அன்வாருடைய அறிக்கையை தாங்கள் எதிர்ப்பதை பதிவு செய்யுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்ளும் இரண்டு பிரம்மாண்டமான பதாதைகளையும் அவர்கள் மரம் ஒன்றில் தொங்க விட்டிருந்தனர்.

“முன்னாள் இராணுவ வீரர்கள் என்னும் முறையில் அனைத்துலகச் சட்டங்களை மீறுகின்ற கொடுங்கோல் ஆட்சியான இஸ்ரேலை தாம் ஆதரிப்பதாக அன்வார் கூறியது, எங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது,” என மலாய் முன்னாள் வீரர்கள் சங்கத் தலைவர் முகமட் அலி பாஹாரோம் கூறினார்.