குவாந்தானில் பசுமைப் பேரணி (Himpunan Hijau)நிகழும் இடத்தில் மக்கள் கூடத் தொடங்கியுள்ளனர்

குவாந்தானில் இன்று காலை வெயில் அடிக்கிறது. அந்த நகரத்திற்கு அருகில் உள்ள கெபெங்கில் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைவதை எதிர்க்கும் மக்கள் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர்.

அந்தத் தொழில் கூடம் கதிரியக்கக் கசிவுகள் ஏற்படக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர்.

குவாந்தான் நகராட்சி மன்றத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Himpunan Hijau 2.0 (பசுமைப் பேரணி2.0) என அழைக்கப்படும் அந்தப் பேரணிக்கு நாடு முழுவதையும் சேர்ந்த 20,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது..

அந்த நிகழ்வில் பங்கு கொள்வதாக பக்காத்தான் ராக்யாட்டின் மூத்த தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அண்மையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2011ம் ஆண்டுக்கான அமைதியான கூட்டச் சட்டத்திற்கு இணங்க போலீசார் அந்தப் பேரணிக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

அந்த நிபந்தனைகளுக்கு பேரணி ஏற்பாட்டாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரத்துக்கு நீடிக்கும் அந்த நிகழ்வு காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.