பாகாங் கம்பாங்கில் நேற்று நிகழ்ந்த செராமா ஒன்றின் போது ஆதரவாளர்கள் தலையிட்டிருக்கா விட்டால் தமது கண்ணும் கறுத்துப் போயிருக்கும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறுகிறார்.
“அந்த நிலைமை ஏற்பட இன்னும் சில அங்குலம் தொலைவு தான் இருந்தது. அதனன நீங்கள் அள்விட முடியாது. அது மிகவும் விரும்பத்தகாத நிகழ்வாகும்,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார். அதற்கு முன்னதாக அந்த கம்பாங் சம்பவம் பற்றி டிராபிக்கானா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
“சிவப்பு நிற டி சட்டையை அணிந்திருந்த அந்தத் தாக்குதல்காரர் மெதுவாக பிகேஆர் செராமா நிகழும் Felda Lepar Hilir 1 திட்டத்தில் உள்ள கோப்பிக் கடைக்குள் நுழைந்து அவரைத் தாக்குவதற்கு கையை தூக்கி விட்டார்.”
“அந்த நேரத்தில் ஆதரவாளர்கள் அதனை தடுத்திருக்கா விட்டால் கறுத்துப் போன கண்ணைக் கொண்டவராக என் தந்தை மட்டும் ஒருவராக இருக்க மாட்டார்,” என அவர் சொன்னார்.
தமது தந்தையை அப்போதைய தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் நூர் குத்திய சம்பவத்தை நுருல் மேற்கோள் காட்டினார் என்பது தெளிவாகும்.
அந்தத் தாக்குதல்காரரை அஸ்ருல்லா அபெண்டி அப்துல்லா என கம்பாங்கில் உள்ள உள்ளூர் போலீசார் அடையாளம் கண்டதாக நுருல் தெரிவித்தார். ஆனால் அது குறித்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.
அந்தச் சம்பவம் குறித்து கம்பாங்கில் உள்ள உள்ளூர் பிகேஆர் தலைவர்களும் இன்று காலை போலீசில் புகார் செய்துள்ளதாகவும் நுருல் தெரிவித்தார்.
அன்று இரவு நிகழ்ந்ததைப் போலீசார் ஒளிப்பதிவு செய்ததை தாம் பார்த்ததால் அதன் வீடியோவை வெளியிடுமாறும் அவர் போலீஸைக் கேட்டுக் கொண்டார்.