அம்னோ வன்முறை: மேலும் தீவிரமானது இன்னும் வரவில்லை

“அந்த அம்னோ குண்டர்கள் அம்னோ குண்டர்களுடன் ஒத்துழக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. பினாங்கு முதலமைச்சருடைய பாதுகாப்புக்கு அம்னோ குண்டர்கள் அபாயத்தை ஏற்படுத்த போலீஸ் அனுமதித்துள்ளது.”

பினாங்கு லினாஸ் எதிர்ப்புப் பேரணிக்கு இடையூறு, மற்ற இடங்களில் சுமூகமாக நடைபெற்றது

அடையாளம் இல்லாதவன்_3f4a: அண்மைய காலமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முந்திய காலத்தில் நிகழப் போகும் ‘விஷயங்களுக்கு’ அவை கட்டியம் கூறுகின்றனவா ?

பொதுக் கூட்டங்களில் இத்தகைய ரௌடித்தனமான நாகரீகமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மலேசியாவில் ஜனநாயகத் தரம், பிரதமர் கூறுகின்ற உலகத் தரத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

“சொல்வது  ஒன்று செய்வது ஒன்று” என்னும் பழக்கம் நமது அரசியல் பண்பாட்டில் வேரூன்றி விட்டதாகத் தோன்றுகிறது.

புத்ராஜெயாவில் எந்த உருமாற்றமும் நிகழ வேண்டுமானால் அது முதலில் அரசாங்கத் தலைவர்களிடம் தொடங்க வேண்டும்.

ஜெரோனிமோ: உங்களுக்கு ஒன்று தெரியுமா ? அம்னோ ஒரே ஒரு முறை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கிற்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது.

13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற டிஏபி-யைத் தாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு சுவா தமது ஆட்களுக்கு அறிவுரை கூறியுள்ளதாக நேற்று செய்தி வெளியாகி உள்ளது. அந்த அம்னோ குண்டர்கள் அதனை அப்படியே எடுத்துக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.

ஜெஸி ஊய் சம்பவம், இப்போது இந்த சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னர் நாட்டை வழி நடத்துவதற்கு சரியான மனிதர்கள் தேவை என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஷா அலாம் செக்சன் 23 குடியிருப்பாளர்களுக்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் நகர மண்டபத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது அத்தகைய அடாவடித்தனம் தலை தூக்கியது. அங்கு அந்த ரௌடிகள் பத்து தீகா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயிலைக் கற்பழிக்கப் போவதாகக் கூட  மருட்டினர்.

அவர்கள் பின்னர் மாட்டுத் தலை ஒன்றை அறுத்து அதனை மந்திரி புசார் அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். பின்னர் அவர்களுக்கு உள்துறை அமைச்சர் தேநீர் விருந்தளித்து கௌரவித்தார். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?

வினோத்: அடுத்து வரும் எந்த ஒரு எதிர்ப்பு அல்லது செராமா கூட்டங்களில் அம்னோ பெர்க்காசா ரௌடிகள் அடுத்து என்ன செய்வர் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அவை மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க பக்காத்தா ராக்யாட் பொருத்தமான தீர்வைக் கண்டு பிடிக்க வேண்டும். பாஸ் கட்சியைப் போன்று அமால் பிரிவை உருவாக்கிக் கொள்ளலாம். அது தற்காப்பை வழங்க முடியும். அம்னோ அல்லாத எதிர்ப்பாளர்களை அம்னோ போலீஸ் பாதுகாக்கப் போவதில்லை என்பது தெரிந்த விஷயமாகும்.

லின்: அரசியல் வெப்பம் கூடும்போது அம்னோ தலைவர்களுடைய உண்மையான சொரூபத்தையும் குண்டர்களைக் கூலிக்கு அமர்த்தும் அவர்கள் போக்கையும் மக்கள் காண முடியும்.

நாம் ஏதாவது செய்யாவிட்டால் அந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை வைத்திருக்கும் அந்த அம்னோ குண்டர் நம் தலைகளையும் தாக்குவார்.

பார்வையாளன்: அந்த அம்னோ குண்டர்கள் அம்னோ குண்டர்களுடன் ஒத்துழக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களின் தலைவர்களுக்கு குறிப்பாக பினாங்கு முதலமைச்சருடைய பாதுகாப்புக்கு அம்னோ குண்டர்கள் அபாயத்தை ஏற்படுத்த போலீஸ் அனுமதித்துள்ளது.

போலீசார் பின்பற்றுகின்ற இத்தகைய வெறுக்கத்தக்க நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த பாதுகாப்பு அதிகாரிகளை வைத்துக் கொள்வது பற்றிப் பரிசீலிக்க வேண்டும். அம்னோ குண்டர்களினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை அவர்கள் பாதுகாக்கலாம்.

TAGS: