என்எப்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் 2009 ஆண்டு வரையில் கிட்டத்தட்ட ரிம81.4 மில்லியனை அந்நிறுவனத்தின் கணக்கிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர் என்று டிஎபி தேசிய விளம்பர தலைவர் டோனி புவா இன்று கூறினார்.
அத்தொகையை தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள் வைத்துள்ளனர். அத்தொகை என்எப்சியிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.
“என்எப்சிக்கு துணை நிறுவனங்கள் இல்லை என்பது 2007 ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையிலிருந்து தெரிகிறது”, என்று அவர் இன்று கோலாலம்பூர் டிஎபி தலைமையகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.