அன்வாரை ஜெயிலில் அடைப்பது பிஎன் பிரச்னைகளைத் தீர்க்காது

“என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்.”

 

 

 

 

 

விக்கிலீக்ஸ்: என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம்

கர்மா: தான் விரும்பும் நீதித்துறை முடிவைப் பெறுவதற்கு அம்னோ அரசாங்கம் எதனை வேண்டுமானாலும் செய்யும் என்பது உலகறிந்த விஷயமாகும்.

அது நமது நாட்டின் நீதித்துறைக்கு மட்டுமின்றி விசாரணை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கு அவமானமாகும். நமது அரசாங்கம் அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு ஆட்சியாளர்களை, நீதித் துறையை, போலீஸை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை, தேர்தல் ஆணையத்தை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்துகிறது என மற்ற நாடுகள் அவ்வப்போது விமசரிப்பது வெட்கக் கேடாக இருக்கிறது.

தவறுதலாக இஸ்மாமிய விவகாரங்களைத் தொட்டு விட்டவர்கள், மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்னரும் கூட வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே வேளையில் மற்ற சமயங்களை தெளிவான நோக்கத்துடன் இழிவுபடுத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அவர் தப்பித்து விடுவார்.

கிட் பி: நிச்சயமாக குதப்புணர்ச்சி வழக்கு இரண்டுக்காக அன்வார் இப்ராஹிம் குற்றவாளியாக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவார். அவ்வப்போது சில நாடகங்கள் அரங்கேறினாலும் வேறு எந்த முடிவையும் நான் எதிர்பார்க்கவில்லை.

புகார்தாரரின் குதத்திலிருந்து எடுக்கப்பட்ட மரபணு 56 மணி நேரம் கழித்தும் மூலத்தன்மை கெடாமல் இருந்ததா இல்லையா என்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை.

புத்திசாலி வாக்காளர்: என்ன நடந்தாலும் அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவார். ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் வடிவமைப்பில் ஆழமான தாக்கம் ஏற்படும்.

மற்றவர்களுடன் அம்னோவும் முழுகிப் போகும். அந்த இடத்தில் புதிய அரசியல் முறை உருவாகும். புதிய தலைவர்கள் தோன்றுவர். அரசியல் குறுக்குப் புத்திக்காரர்கள் நீண்ட காலமாக நிராகரித்து வந்த தேவைகளைப் பூர்த்தி செய்வர்.

அடையாளம் இல்லாதவன்_40dc: பொது மக்கள் எண்ணம் அல்லது ஆதாரம் எதுவாக இருந்தாலும் அன்வாரை சிறையில் அடைப்பதே அம்னோ/பிஎன் நோக்கம். தாங்கள் அதிகாரத்தில் அன்வார் மருட்டல் என அவை கருதுவதே அதற்குக் காரணம்.

அதிகாரத்தில் இருந்தால் நாட்டைத் தொடர்ந்து கொள்ளையிடலாம். இஸ்லாத்தை மேம்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் அம்னோ இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை. அது வெற்று சுலோகங்களை வீசுகிறது.

அடையாளம் இல்லாதவன்_4031: அன்வாரை ஜெயிலில் அடைப்பது, மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரிப்பதை நிறுத்தாது. தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவை சிறையில் போட்டதால் வெள்ளையர் ஆட்சி வீழ்த்தப்படுவதை நிறுத்தியதா? இல்லையே? ஆனால் 28 ஆண்டுகள் பிடித்தன. மலேசியாவில் அவ்வளவு காலம் பிடிக்காது.

எகிப்து, துனிசியா, லிபியா, பாஹ்ரெய்ன், ஏமன் ஆகியவற்றைப் பாருங்கள். சர்வாதிகாரிகளை மக்கள் வீழ்த்தியுள்ளனர். பர்மா கூட பிடியைத் தளர்த்துகிறது. அதன் அதிபர் ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூ கியைச் சந்தித்துள்ளார்.

லாக்கியா: மக்கள் முட்டாள்கள் என பிரதமரும் அம்னோவும் நினைத்துக் கொண்டிருக்கட்டும். உண்மையில் இப்போது விரக்தி அடைந்திருப்பது அம்னோவும் நஜிப்பும்தான். அன்வாரோ பக்காத்தானோ அல்ல.

அதனால்தான் அவர்கள் அன்வார், டிஏபி, மாட் சாபு, கிறிஸ்துவர்கள் பற்றி பொய்களை பரப்புவதற்கு ஊடகங்களைக் குறிப்பாக டிவி 3-ஐயும் உத்துசான் மலேசியாவையும் பயன்படுத்துகின்றனர்.

TAGS: