மலேசிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில், ரிம500மில்லியன் கேட்டு தாஜுடின் தொடுத்த எதிர்-கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்யும் அரசாங்க முயற்சி தோல்வியுற்றது.
அதேபோல், எம்ஏஎஸ்-இன் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாஜுடின் தொடுத்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் தன் சரக்கு ஏற்றி இறக்கும் நடவடிக்ககளுக்கான தளத்தை இடமாற்றம் செய்ததால் மிகப் பெரிய இழப்பீடு வழங்க வேண்டியிருந்ததாகவும் அதற்கு தாஜுடினே பொறுப்பு என்றும் கூறி எம்ஏஎஸ் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தது.
அவ்விரண்டு வழக்குகளும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
வழக்குச் செலவுகளை, வாதிகள் இருவருமே-அரசாங்கமும் தாஜுடினும்- ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி ரீலா யோப் தீர்ப்பளித்தார்.
தாஜுடினின் வழக்குரைஞர், லிம் கியான் லியோங் இத்தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தாஜுடினுக்கு எதிராக எம்ஏஎஸ் தொடுத்துள்ள வழக்கு அடுத்த திங்கள்கிழமை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.