யாயாசான் சிலாங்கூர்லிருந்து ரிம500 மில்லியன் காணவில்லை என்கிறார் அதன் தலைமை நிர்வாகி

பிஎன் ஆட்சியில் மாநிலக் கல்வி அற நிறுவனமான Yayasan Selangor-லிருந்து கிட்டத்தட்ட அரை பில்லியன் ரிங்கிட் காணாமல் போயிருப்பதாக அதன் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுபேற்றுள்ள இல்ஹாம் மார்சுக்கி கூறுகிறார்.

அவர் செல்காட் என அழைக்கப்படும் திறமை, பொறுப்பு, வெளிப்படை மீதான மாநிலச் சட்டமன்றத் தேர்வுக் குழுவின் முன்பு சாட்சியமளித்தார்.

“எங்கள் ஆய்வின் படி 1991ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை Yayasan Selangor-லிருந்து 500 மில்லியன் ரிங்கிட் கசிந்துள்ளது,” என அவர் அந்தக் குழுவிடம் இன்று தெரிவித்தார்.

அந்தக் கசிவு இல்லை என்றால் எங்கள் சொத்துக்கள் 800 மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்.”

தற்போது அந்த அற நிறுவனத்திடம் 300 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள அசையாத சொத்துக்களும் ரொக்க வைப்புத் தொகைகளாக 50 மில்லியன் ரிங்கிட்டும் இருப்பதாக அவர் சொன்னார்.

500 மில்லியன் ரிங்கிட் காணாமல் போனது குறித்து ஆய்வு நடத்தி அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் பொருட்டு கணக்காய்வு செய்வதற்கு Yayasan Selangorக்கு மாநில அரசாங்கமும் செல்காட்-டும் உதவ வேண்டும் என்றும் இல்ஹாம் கேட்டுக் கொண்டார்.