சிலாங்கூரில் ரிம11மில்லியன் இழப்புகண்டதால் அரசுசார் நிறுவனங்கள் இரண்டு வெளியாருக்கு விற்கப்பட்டன, மூன்றாவது மூடப்பட்டது.
திறமை, பொறுப்புடைமை,வெளிப்படைத்தன்மை மீதான மாநிலத் தேர்வுக்குழு (செல்கேட்)விடம் இன்று இது தெரிவிக்கப்பட்டது.
ரிம90.3மில்லியன் மத்திய அரசுக் கடனுதவியைக் கொண்டு 2005க்கும் 2006-க்குமிடையில் தொடங்கப்பட்ட அம்மூன்று நிறுவனங்களும் விவசாயத்தை வணிகமயமாக்கும் நோக்கில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்(பிகேபிஎஸ்) துணை நிறுவனங்களாக செயல்பட்டு வந்தன.
அப்போது அப்துல்லா அஹ்மட் படாவி பிரதமராக இருந்தார். சிலாங்கூர் பிஎன்னிடம் இருந்தது.
ஆனால், அம்மூன்றும் நிரணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை என்பதுடன் பெரும் இழப்புகளையும் எதிர்நோக்கின. தலைமைக் கணக்காய்வாளரும் 2010 கணக்கறிக்கையில் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்போதைய பிகேபிஎஸ் நிர்வாகம்,அத்திட்டங்களுக்கு “புத்துயிரூட்ட வழியே இல்லை” என்ற முடிவுக்கு வந்துது.
மேலும் இழப்புகளைத் தவிர்க்க, இரண்டு நிறுவனங்களை விற்கவும் ஒன்றை மூடவும் பிகேபிஎஸ் முடிவு செய்தது.