கடந்த மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவை நோக்கி தமது காலணிகளை எறிந்த 46 வயது இமாம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து அவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தமது செயலுக்குக் காரணம் காட்டுமாறு இமாம் ஹொஸ்லான் ஹுசேனைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் நேற்று அவருக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அந்த நீதிபதிகள் குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார்.
ஹொஸ்லான் தெரிவித்த காரணங்களைச் செவிமடுத்த பின்னர் நீதிபதிகள் குழுவின் தலைவர் சுல்கெப்லி அகமட் மாக்கினுடின் அந்தத் தீர்ப்பை வாசித்தார்.
“நீங்கள் சொல்லிய காரணங்களைச் செவிமடுத்து ஆய்வு, குழுவுடன் ஆலோசனை செய்த பின்னர் நீங்கள் போதுமான விளக்கத்தை கொடுக்கத் தவறி விட்டதாக நாங்கள் முடிவு செய்தோம்.”
“நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ளாததாக நாங்கள் தீர்ப்பளிக்கிறோம்.”