அமெரிக்க சிப்பாய் சுட்டதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் வகைதொகையின்றி துப்பாக்கித் தாக்குதல் நடத்திய ஒரு அமெரிக்க சிப்பாய் வீடுவீடாகச் சென்று சுட்டதில் குறைந்தபட்சம் 15 பேரைக் கொன்றிருக்கிறார். அவர்களில் 9 பேர் குழந்தைகளாவர்.

ஞாயிறன்று காலையில் இந்தத் சம்பவம் நடந்திருக்கிறது.
அந்தச் சிப்பாய் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைகளுக்கு முன்னதாக அவர் மனோ ரீதியாக உடைந்து போயிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நடந்த மாகாணத்தில் ஏற்கனவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.

காந்தஹாரில் நடந்த இந்தச் சம்பவத்ததால் தான் மிகவும் வேதனையடைந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் லியோன் பனெட்டா கூறியிருக்கிறார்.

அமெரிக்க தளம் ஒன்றில் கடந்த மாதம் குரான் தவறுதலாக எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஆப்கானியர்களுக்கும் அமெரிக்கப் படையினருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.