சுங்கை சிலாங்கூர் ஆலையில் பராமரிப்பு வேலை முடிந்தது

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலையில் முதல்கட்ட பராமரிப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக ஷபாஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக இன்று காலை தொடங்கி ஹுலு சிலாங்கூர்,பெட்டாலிங், கோலாலம்பூர், கோலா லங்காட் ஆகிய இடங்களுக்கு நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் பெர்ஹாட்டின் நிறுவன தொடர்புத்துறை நிர்வாக இயக்குனர் அப்துல் ஹலிம் மாட் சொம் கூறினார்.

“மொத்த பராமரிப்பு வேலையும் கட்டம்கட்டமாக இன்றிரவு 8மணிக்குள் முடிவுக்கு வரும்”,என்று நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்த அவர், பயனீட்டாளர்கள் நீரை விரயமாக்காமல் விவேகமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

-பெர்னாமா

TAGS: