பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் நெகாரா(கித்தா) தலைவர் ஜைட் இப்ராகிம், 13-வது பொதுத் தேர்தலில் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டியிடவில்லை என்றும் தகுதி இருப்பதால் போட்டியிடுவதாகவும் ஜைட் வலியுறுத்தினார்.
“என் அரசியல் போராட்டத்தைச் சரியாக புரிந்துகொள்ளாததால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தகுதி இருப்பதாலும் வாய்ப்பு இருப்பதாலும் அங்கு போட்டியிடுகிறோம்.
“புரியாத்தனமாக கித்தா ஒன்றும் போட்டியிடவில்லை”, என்று முன்னாள் கோத்தா பாரு எம்பி-ஆன ஜைட் கூறினார்.அவர், நேற்றிரவு கோத்தா பாரு குபாங் கிரியானில் உள்ள தமது இல்லத்தில் கித்தா தேர்தல் இயந்திரத்தைத் தொடக்க்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜைட், 2004 பொதுத் தேர்தலில் கோத்தா பாருவில் பிஎன் வேட்பாளராகக் களமிறங்கி பிகேஆர் வேட்பாளரான முகம்மட் நிக் ஹசனை 1,723 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
-பெர்னாமா