சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மலேசியாவின் “தங்கச் சுரங்கம்”

“சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் ‘கடத்தலில்” குடிநுழைவு அதிகாரிகளும் வேலை வாய்ப்பு முகவர்களும் கூட்டாக இயங்குகின்றனர்.”

 

 

 

 

 

வில்கிலீக்ஸ்: மனிதக் கடத்தலில் குடிநுழைவுத் துறையும் சம்பந்தப்பட்டுள்ளது

ஊழியர்: மாதச் சம்பளம் 1,300 ரிங்கிட்- ஒன்பது ஆண்டுகள் தவணைக்காலத்தைக் கொண்ட பெரோடுவா காருக்கு 300 ரிங்கிட், பெட்ரோலுக்கு இன்னொரு 150 ரிங்கிட், இரண்டு பிள்ளைகளுக்கான செலவுகள் 200 ரிங்கிட், வீட்டுக் கடனுக்கு 350 ரிங்கிட்- போக என்ன மிச்சமிருக்கிறது?

அரசாங்க ஊழியர்கள் குடி நுழைவுத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கில் ஆதாயம் அடைந்து விட்ட மாண்புமிகு-க்களின் வாழ்க்கை முறையுடன் போட்டியிட வேண்டியிருப்பதால் மேலே கூறப்பட்ட விஷயங்களைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தகைய சூழலில் நல்ல வரவைத் தரும் வண்டியில் அவர்கள் ஏறுவதை எது தடுக்க முடியும்?

நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்ற கட்டத்தை நாம் அடைந்து விட்டோம். ஆனால் பிடிபடக் கூடாது. எல்லா திசைகளிலும் உண்மை நிலை அவ்வாறு இருக்கும் போது அவர்களை நீங்கள் குறை சொல்லக் கூடாது. எஜமானர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் நீங்கள் முன் கூட்டியே ஒய்வு பெறுவதற்கு விரும்பினால் தவிர வேறு யாருக்கும் அதனை ஆட்சேபிக்க துணிச்சல் இருக்காது.

சராஜுன் ஹுடா: அந்தக் கட்டுரை மிகவும் உண்மையானது. நாடு முழுவதும் கள்ளக் குடியேறிகள் காணப்படுவதற்கு மோசமான குடிநுழைவுக் கொள்கைகளும் அவற்றின் குளறுபடியான அமலாக்கமுமே காரணமாகும்.

வேலை வாய்ப்பு முகவர்களாக செயல்படும் அரசியல் ஆதரவாளர்களுக்கு உதவும் வகையில் உள்துறை அமைச்சு கொள்கைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இரண்டு மில்லியன் பேர் எப்படி கள்ளக் குடியேறிகளாகினர்? அவர்களை இன்னும் பிடிக்க முடியவில்லை?

அவர்களைக் கொண்டு வந்தது யார்? அந்த கள்ளக் குடியேறிகளை குறியாகக் கொண்டு போலீசார் எவ்வளவு பணம் பண்னுகின்றனர்?

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் “கடத்தலில்” குடிநுழைவு அதிகாரிகளும் வேலை வாய்ப்பு முகவர்களும் கூட்டாக இயங்குகின்றனர். நடப்பு கை விரல் ரேகைப் பதிவு முறை பணம் பண்ணுவதற்கு இன்னொரு வழியாகும்.

எல் ஜாய்: அம்னோவைச் சார்ந்துள்ள அரசாங்கச் சேவை இப்படித்தான் இருக்கும். பணம் பண்ணும் திட்டங்கள் தேவைப்படும் ஊழல் ஆட்சியை அரசாங்கச் சேவை தெரிந்தே ஆதரிக்கிறது.

ஊழலுக்காக எந்த ஓஇ அரசு ஊழியர் மீதும் இந்தப் போக்கிரி அரசாங்கம் வழக்குத் தொடர்ந்திருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு தொடரப்பட்டாலும் மக்கள் அதனை மறக்கும் வரையில் அந்த வழக்கு பல முறை தள்ளி வைக்கப்படும். இறுதியில் நீதிமன்றங்கள் அந்த வழக்கை நிராகரித்து விடும்.

அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குக்களை சற்றுப் பின்னோக்கி பாருங்கள். அவர்களில் 99 விழுக்காட்டினர் எந்தத் தண்டனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்களுடைய திருட்டு வேலைகள் தொடரும்.

பிலியோ: அகதிகளாக இருந்தாலும் சரி கள்ளக் குடியேறிகளாக இருந்தாலும் சரி அவர்கள் பெரும்பாலான மலேசியர்களுக்குக் குறிப்பாக அமலாக்க அதிகாரிகளுக்கும் அரசாங்க அமைச்சர்களுக்கும் தங்கச் சுரங்கம்.

குறைந்த பட்ச சம்பளத்துக்கும் குறைவாக அவர்களை வேலைக்கு அமர்த்தும் மலேசியர்கள், வணிகர்கள், தனிநபர்கள் ஆகியோரையும் மறந்து விட வேண்டாம்.

ஆகவே இந்த நாட்டில் இரண்டு மில்லியன் கள்ளக் குடியேறிகள் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உதட்டளவில் மட்டுமே செயல்படுகிறது.

TAGS: