தேசியக் கடன் அதிகமாகக் கூடியதற்கு தவறான பிஎன் நிர்வாகமே காரணம்

“மொத்த உள்நாட்டு உறபத்தியில் நமது கடன் 55 விழுக்காட்டை எட்டும் வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும். நீர்க் குழாய் உடையும் வரை காத்திருந்து பின்னர் அதனைச் சரி செய்வதா?

கவலை வேண்டாம். நமது கடன் அபாய நிலையைக் காட்டிலும் 2% குறைவாக உள்ளது

வெறும் பேச்சு வேண்டாம்: நிதித் துணை அமைச்சர் அவாங் அடெக் ஹுசேன் போன்ற தலைவர்கள் நாட்டை நிர்வாகம் செய்வது மிகவும் அச்சமாக இருப்பதற்கு அது தான் காரணம். தேசியக் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 55 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவாங் அடெக் சொல்கிறார் இன்னும் அபாய கட்டத்தை எட்டவில்லை என்று.

உங்கள் வங்கிக் கணக்கில் இணையம் வழியாக நீங்கள் வைப்புத் தொகையைப் போடலாம். அது ஊழலாகக் கருதப்பட மாட்டாது. அதனையே நீங்கள் சிங்கப்பூரில் செய்தால் நீங்கள் சாங்கிச் சிறைச்சாலைக்குப் போக வேண்டியிருக்கும்.

எந்த இயற்கை வளமும் இல்லாத சிங்கப்பூரின் ஒரு டாலருடைய பரிவர்த்தனை விகிதம் 2 ரிங்கிட் 40 சென் ஆக இருப்பதற்கான காரணம் நமக்கு இன்னும் தெரியவில்லை. அந்த பரிவர்த்தனை விகிதம் 1970ம் ஆண்டு ஒரு சிங்கப்பூர் டாலருக்கு 95 சென் ஆக இருந்தது.

இன்னும் அபாய கட்டம் வரவில்லை என்கிறார் அவாங் அடெக். அந்த பரிவர்த்தனை விகிதம் ஒரு சிங்கப்பூர் டாலருக்கு 3 ரிங்கிட் என்ற நிலையை எட்டும் போது அது அபாயக் கட்டம் என அறிவிக்கலாம்.

அவாங் அடெக், நியாமான தூய்மையான மலேசியர்களுடைய கண்களில் நீங்கள் தோல்வி கண்ட ஊழல் அரசியல்வாதி. அதனால் விலகிக் கொள்ளுங்கள்.

அந்நியன்: 56 ஆண்டுகள் சுதந்திரத்துக்கு பின்னர் நமது தேசியக் கடன் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நாம் நமது கடன் அளவை ஒரு விழுக்காடு வீதம் கூட்டி வந்துள்ளோம்.ஆகவே 2013ம் ஆண்டு நாம் நிச்சயம் அந்த இலக்கை அடைந்து விடுவோம்.

அடையாளம் இல்லாதவன்: அரசமைப்பு ரீதியில் அரசாங்கம் கடன் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைக் காட்டிலும் நாட்டின் தேசியக் கடன் இரண்டு விழுக்காடு குறைவாக உள்ளது. ஆகவே அரசாங்கம் நாடு கவிழும் வரையில் கடன்களை வாங்கிக் கொண்டே போகலாமா ?

உண்மையில் முட்டாள்தனமான பதில். கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் அரசுக்கு உள்ளதா என்பதை அவர் கருத்தில் கொண்டாரா ?

சாதாரண மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போராடும் வேளையில் முது நிலை அரசு அதிகாரிகள் ஆடம்பரமாக பிறந்த நாள் விழாக்களையும் திருமண நிச்சயதார்த்த விருந்துகளையும் நடத்துகின்றனர். மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை இங்கும் வெளிநாட்டிலும் வாங்குகின்றனர்.

அடையாளம் இல்லாதவன்_1332466493: நமக்குக் கிடைத்துள்ள முட்டாள் அமைச்சர் அவர் ஆவார். அரசமைப்பு வரம்பான 55 விழுக்காட்டுக்குக் குறைவாக 53 விழுக்காடாகத் தேசியக் கடன் இருப்பதாக நமக்குக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த 53 விழுக்காட்டில் அரசாங்கம் உத்தரவாதம் பெற்ற கடன்கள் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் மொத்த தேசிய உற்பத்தியில் அது 62 விழுக்காடாகி விடும் என எம்பி டோனி புவா சொல்வது உண்மையே.

என்றாலும் அந்தத் துணை அமைச்சர் சொல்கிறார். “கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று”. முட்டாள்கள் தான் அப்படிப் பேசுவார்கள்.

அந்த வரம்பைத் தாண்டினால் என்ன நடக்கும் தெரியுமா ? கிரீஸுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும்.

சீ ஹோ சியூ: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவு 53 விழுக்காடு ! ஆனால் கவலைப்பட வேண்டாம். நான் அவராக இருந்தால் மிகவும் கவலைப்பட்டிருப்பேன். இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டுக்கு இவ்வளவு கடன் எப்படி வந்தது ? அதற்கு நிர்வாக முறைகேடுகளே காரணம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

அந்தக் கடன் அளவுக்கு வட்டி விகிதம் என்ன ? நாம் ஆண்டு தோறும் எவ்வளவு திருப்பிச் செலுத்துகிறோம். கடன்களை தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ன திட்டம் வைத்துள்ளது ? அது குறித்து நமது நிதி அமைச்சர் சிந்தித்துப் பார்த்தாரா ?

நியாயமானவன்: “உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்னும் 2 விழுக்காடு குறைவாக உள்ளது ஆகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம் என மருத்துவர் சொல்வதைப் போல அது உள்ளது.

எனவே அவாங் அடெக், அஸ்தமன காலம் வரையில் நீங்கள் பனத்தைத் திருடிக் கொண்டே இருக்கலாம். நீங்கள் தேசியக் கடனைத் தீர்ப்பதற்கு எந்தத் தீர்வையும் முன் வைக்கவில்லை.

யூஸின்டி: மொத்த உள்நாட்டு உறபத்தியில் நமது கடன் 55 விழுக்காட்டை எட்டும் வரையில் நாம் ஏன் காத்திருக்க வேண்டும். நீர்க் குழாய் உடையும் வரை காத்திருந்து பின்னர் அதனைச் சரி செய்வதா ?

அடையாளம் இல்லாதவன்: அந்த இரண்டு விழுக்காட்டை ரிங்கிட் கணக்கில் சொல்லவும்.  இந்த முட்டாள் பிஎன் தலைவர்களுக்கு என்ன நேர்ந்தது ?

கவலைப்பட வேண்டாம் என அவர்கள் சொல்கின்றனர். அதனை முக்கிய நாளேடுகளில் தலைப்புச் செய்திகளாகப் போடச் சொல்லுங்கள். அப்போது தீவிர பிஎன் ஆதரவாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா எனப் பார்ப்போம்.

TAGS: