பழனிவேல் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார்

மஇகா ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களை சந்திக்கும் இயக்கத்தைத் தொடங்கும். இவ்வாறு அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறுகிறார்.

“எங்கள் எந்திரம் அதற்கு ஏற்கனவே தயாராகி விட்டது. தனது சொந்தக் கட்சி வாக்காளர்களை சந்திப்பது அதன்  முதல் நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிலாங்கூர், பேராக்கிலும் அடுத்து கெடாவிலும் நாங்கள் அந்த நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த மூன்று மாநிலங்களும் எங்களுக்கு முக்கியமானவை,” என்று அவர் சொன்னார்.

அந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள மஇகா தொடர்புக் குழுக்கள் வாக்காளர்களுடன் கலந்துரையாடலை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அது தொடும் தளத்தைப் போன்று இருக்கும். முக்கியமான விஷயங்கள் மீது கருத்துக்களைப் பெறுவதும் அதன் நோக்கமாகும். இந்தியர்ர் வாக்குகள் திரும்பக் கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்புவதால் அந்த மூன்று மாநிலங்களும் எங்களுக்கு முக்கியமான போர்க்களங்களாகும்.”

“ஒவ்வொரு கட்சி ஊழியரும் கட்சியின் வீரராகவும் சமூகத்தின் வீரராகவும் திகழ வேண்டும். நாம் போருக்குத் தயாராக இருக்க வேண்டும். நாம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் எந்திரத்தை சோதனை செய்கிறோம்,” என பழனிவேல் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

2008ம் ஆண்டு மஇகா 9 நாடாளுமன்றத்  தொகுதிகளிலும் 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் தாப்பா, கேமிரன் ஹைலண்ட்ஸ், சிகாமாட் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது.

TAGS: