சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்!

சிரியா மீது எதிராக புதிய தண்டனைத் தடைகளைக் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அஸத்தின் மனைவி அஸ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பிறர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வருவதற்கு தடை விதிப்பது என்பதும் இந்தத் தடைகளில் அடங்கும். அத்துடன் இவர்களது சொத்துக்களை முடக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சிரிய குடியரசுத் தலைவர் அஸத்துக்கு நெருக்கமானவர்கள் 12 பேரை இந்த தண்டனைத் தடைகள் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

ஆனால், அஸத்தின் மனைவி மீது பயணத் தடை விதிக்கப்படாலும் அவர் பிரிட்டனுக்குள் வருவதை தங்களால் தடுக்க முடியாது ஏனெனில் அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் என பிரிட்டிஷ் குடிவரவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.