பொதுக் கடன் வான் அளவு உயர்ந்ததற்கு யார் பொறுப்பு?

“அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை.”

நிதிப் பொறுப்பும் பொதுக் கடன்களும்: அச்சத்தை எப்படித் தவிர்ப்பது

உங்கள் அடிச்சுவட்டில்: அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் மிகவும் கௌரவமான முறையில் அமைதியாக விளக்க முயன்றுள்ளார் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் அம்னோ/பிஎன் அந்த விஷயத்தை உண்மையான அக்கறையுடனும் பொதுப் பொறுப்புணர்வுடனும் கவனிப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.

ஆகவே பக்காத்தான் ராக்யாட் முன்மொழிந்துள்ள தேசியக் கொள்கைகள் பொதுக் கடனை வான் அளவுக்கு உயர்த்தி விடும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் கூறியுள்ள கருத்து தேவையற்றது.

நமது கடன் அளவு ஏற்கனவே உயர்ந்துள்ளது. உற்பத்தி இல்லாத பொது முதலீடுகளும் கடந்த காலத்தில் முந்திய நடப்பு அரசாங்கங்கள் கொள்ளையடித்த மற்ற செலவுகளும் அதற்குக் காரணங்களாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் திறமையான பொருளாதாரத்தை உருவாக்கவும் கடன் பயன்படுத்தப்பட்டிருந்தால் கடன் அளவு என்பது பெரிய பிரச்னையாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

காஸ்காரா: பிஎன் அரசாங்கம் உள்நாட்டில் பெறப்படும் நிதிகளைப் பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அது சரி தான் என அது எண்ணுகின்றது.  அதனை முழுமையாக அதனைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் அதற்கு  இல்லையோ என்னவே ?

அவை அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதிலும் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க நாட்டின் கருவூலத்தை காலியாக்குவதிலும் மட்டுமே அவை முனைப்பாக ஈடுபட்டுள்ளன. மற்ற அனைவரும் ஆற்றில் குதித்து விடலாம்.

எஸ்எம்சி:  உண்மையில் அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை.

நாம் அந்தப் பிரச்னையிலிருந்து ஒடவும் முடியாது. என்றாலும் அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதால் அம்னோ/பிஎன் -னுக்கு பேரிடி விழப் போவதில்லை.

நகரங்களில் உள்ள தொகுதிகளில் முழுமையாக கைப்பற்றுவதின் மூலம் பக்காத்தான் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. பிஎன்- னுக்கு கிராமப்புற மக்கள் அளிக்கும் ஆதரவை பக்காத்தானுக்கு மாற்றுவதற்கு பக்காத்தான் தோழமைக் கட்சிகள் வியூகங்களை வகுக்க வேண்டும்.

பாக்மான்: நிதிப் பொறுப்பும் பொதுக் கடனும் என்பது மீதான ராபிஸி ராம்லியின் கண்ணோட்டம் மிகவும் தெளிவானது. மலேசியா மிக மோசமான சூழ்நிலையை எதிர்நோக்குகிறது என்பதை சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ள முடியும்.

ரெம்பாவ் தொகுதியின் கைரி போன்ற எம்பி-க்களும் நிதித் துணை அமைச்சர் அவாங் அடெக் ஹுசேன் போன்றவர்களும் அதனை விவேகமாகப் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டமாகும்.

அதனைச் சரி செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இந்த மோசமான சூழ்நிலைகள் மலேசியாவை திவாலாக்கி விடும் என பெமாண்டு தலைவர் இட்ரிஸ் ஜாலா கூட ஆரூடம் கூறியுள்ளதை நாம் மறக்கக் கூடாது.