ஒய்வு வயதை 55லிருந்து 60 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யும் உத்தேச தனியார் துறை ஓய்வு வயது மசோதா இவ்வாண்டு சட்டமாகக் கூடிய சாத்தியம் இல்லை என்று மனித வள அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.
அதன் நகல் மசோதாவை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் இன்னும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சொன்னார்.
“நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது தாக்கல் செய்யப்பட மாட்டாது. அடுத்த கூட்டத் தொடரில் அது சமர்பிக்கப்படும்.” என சுப்ரமணியம் சொன்னதாக ஆங்கில மொழி நாளேடான தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே இந்த ஆண்டு ஒய்வு பெறும் ஊழியர்கள் “காப்பாற்றப்பட மாட்டார்கள்” என்றும் 2013ல் ஒய்வு
பெறவிருப்பவர்களுக்கு அவர்களுடைய வேலைகள் நீட்டிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் கூடுதலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ஒய்வு வயது யோசனையை தொடக்கத்தில் மலேசிய முதலாளிகள் சம்மேளனம் எதிர்த்தது. நாடு முழுவதும் உள்ள 6 மில்லியன் ஊழியர்களுக்கு அது நன்மை தரும் என்பதால் அதனை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் வரவேற்றது.