‘வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்பு நிறுவனத்தையும் பெயர் குறிப்பிட்டுள்ள போது எம்ஏசிசி எப்படி விசாரிக்க முடியும் ? குழப்ப வேண்டாம். பஞ்சாயத்து மன்றத்தை அமையுங்கள்.’
(Copgate) போலீஸ் ஊழலை எம்ஏசிசி விசாரிக்கட்டும் என்கிறார் ஹிஷாம்
கைரோஸ்: என்னைப் பொறுத்த வரையில் பாகுபாடு இல்லாமல் நேர்மையாக விசாரணை செய்யும் யாராக இருந்தாலும் பரவாயில்லை. விசாரிப்பதற்கு சரியான அமைப்பு என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் எம்ஏசிசி-யைக் கருதினால் அப்படியே இருக்கட்டும். உடனடியாக அதனைத் தொடங்குமாறு அதற்கு உத்தரவு போடுங்கள்.
உண்மை வெளி வரவேண்டும் என்று மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். ரகசியக் கும்பலுடன் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் (ஐஜிபி) சட்டத்துறைத் தலைவரும் (ஏஜி) ஒத்துழைத்ததை மறைப்பதற்கு நிர்வாக அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றால் தலைகள் உருள வேண்டும்.
இல்லை என்றால் நமது சட்ட அமலாக்க அதிகாரிகள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகி விடும்.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உண்மையானவராக இருந்தால் எம்ஏசிசி உடனடியாக விசாரணையைத் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
கேஎஸ்என்: போலீசைக் காட்டிலும் எம்ஏசிசி சுயேச்சையானது, மேலும் சுயேச்சையானது, பாகுபாடு காட்டாதது என நீங்கள் சொல்ல வருகின்றீர்களா ?
ஆனால் அது நாட்டின் மிக முக்கியமான பொது அமைப்புக்களைச் சார்ந்த இரண்டு முதுநிலை அதிகாரிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது சம்பந்தப்பட்டதாகும்.
அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படாத வேளையில் அதனை விசாரிக்குமாறு எம்ஏசிசி ஏன் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும் ?
சுயேச்சையான பஞ்சாயத்து மன்றமே அந்த விவகாரத்துக்கு சரியான வழியாகும். வழக்குத் தொடருவதற்கு எம்ஏசிசி சட்டத்துறைத் தலைவருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டியது இன்னும் அவசியம் தானே ?
அடையாளம் இல்லாதவன்: வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்பு நிறுவனத்தையும் பெயர் குறிப்பிட்டுள்ள போது எம்ஏசிசி எப்படி விசாரிக்க முடியும் ?
குழப்ப வேண்டாம். பஞ்சாயத்து மன்றத்தை அமையுங்கள்.
ஹலோ: (Copgate) போலீஸ் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக எம்ஏசிசி பழி சுமத்தப்பட்டுள்ளது. தெங்கு கோ பற்றியும் அவரது சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றியும் அப்போதைய ஐஜிபி-யுடன் அவருக்கு இருந்த தொடர்பு பற்றியும் நடத்தப்படும் விசாரணையில் தலையிடுமாறு ஏஜி, எம்ஏசிசி-க்கு பணித்துள்ளார்.
அதன் விளைவாக அது வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறையிலிருந்து கோப்புக்களை கைப்பற்றியுள்ளது.
ஆகவே (Copgate) போலீஸ் ஊழலை எம்ஏசிசி எப்படி விசாரிக்க முடியும் ? அது குற்றம் புரிந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை, அவருடைய குற்ற நடவடிக்கைகள் எனக் கூறப்படுவதை புலனாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்.
அடையாளம் இல்லாதவன்: ஏஜி முன்னாள் ஐஜிபி மூசா ஹசானையும் மூசா ஏஜி-யையும் விசாரிப்பதற்கு அல்லது தெங்கு கோ, அந்த இருவரையும் விசாரிப்பதற்கு நாம் அனுமதிக்கலாமே ? அது நன்றாக இருக்கும்.