ரஷ்யாவில் இந்து கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து ‌கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 1992-ஆம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டு‌களே முடிவடைந்துள்ள நிலையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இக் கோவிலில் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கோவிலை இடிக்க முற்பட்டுள்ளனர். இப்பிரச்னையில் தீர்வு காண வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் ரஷ்ய குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இக் கோவிலை நிர்வகித்து வரும் சுரேன் காராபெட்யான் என்பவர் தெரிவித்தார்.